எஸ் எல் பைரப்பாவின் சுயசரிதை புகழ்பெற்ற ஒன்று. காலச்சுவடு இதழில் எஸ் எல் பைரப்பா அவர்களின் மறைவு சந்தர்ப்பத்தில் தாம் எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் இந்த சுயசரிதை குறித்து எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த முதன்மையான கன்னட எழுத்தாளர்களின் வாழ்வை ஏதோ ஒரு வகையில் பிளேக் நோய் பாதித்திருக்கிறது. யூ ஆர் அனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா நாவலில் பிளேக் பற்றிய மனம் நடுக்கும் காட்சிகள் உள்ளன. பைரப்பாவின் வாழ்க்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. மரணங்கள் ,மரணங்கள் , மரணங்கள் ஒரே நாளில் இரண்டு மணி நேரத்திற்குள் அண்ணன் அக்கா ஆகியோரின் மரணங்கள். பிறகு சுசிலா என்னும் ஒன்றரை வயது தங்கையின் மரணம். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத ஒரு நாளில் வந்து சேரும் அம்மாவின் மரணச் செய்தி. அம்மாவின் மரணத்திற்கும் ப்ளேக் தான் காரணம். ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் இடம்பெறும் நஞ்சம்மா யாரும் இல்லை என்னுடைய அம்மா கௌரிதான் என்று பைரப்பா வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். அம்மா இறந்து போன தருணத்தில் மனநிலைப் பிற...
Comments
Post a Comment