எனக்குக் கிடைத்த இரு புதையல்கள்

காண்டேகரின் யயாதி பற்றி பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  எழுத்தாளர் ஜெயமோகனின் கண்ணீரைப் பின் தொடர்தல் தொகுப்பிலும் யயாதி பற்றி ஒரு விரிவான கட்டுரை உள்ளது.  
தர்மபுரி கல்லூரியின் மாண்பமை முதல்வர் பேராசிரியர் கோ . கண்ணன் ஒரு மிகச் சிறந்த இலக்கிய வாசகர். பார்வையற்றவர்களுள் நவீன இலக்கிய அறிமுகமும் ஈடுபாடும் கொண்ட சிலருள் ஒருவர். அவரும் கூட யயாதி நாவல் பற்றி என்னிடம் பேசியிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் யயாதி என்ற ஒரு சிறு நூல் கிடைத்தது. ஆனால் அது காண்டேகரின் நாவல் அல்ல. 
 ‌  இந்தியாவின்  சிறந்த  நாவல்  ஒன்றை படிக்கும் வாய்ப்பிற்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.  
இதற்கிடையே  யயாதி நாவல் பற்றி வாசகர் மணிமாறன் எழுதிய கடிதத்தை ஜெ தளத்தில்  வாசித்தபோது நாவலை படிக்க வேண்டும் என்ற எண்ணம் மறுபடியும் அதிகரித்தது. தற்செயலாக கிண்டிலில்  தேடிப் பார்த்தேன். இரண்டு தொகுதிகளும் இருந்தன. உடனே வாங்கி விட்டேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தொழில்நுட்பம் எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம்! 
ஒரு நாள் யயாதி பற்றிய மதிப்புரையை இந்த வலைப் பக்கத்திலேயே எழுதுவேன். 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்