இவர்கள் வாழ்ந்தார்கள்
எஸ் எல் பைரப்பாவின் சுயசரிதையில் இப்படி ஓர் இடம் வருகிறது. அவருடைய வீட்டிற்கு இரண்டு இளம் அதிகாரிகள் வருகிறார்கள். ஒருவர் வங்கியின் மேலாளர், மற்றொருவர் அக்கவுண்டன்ட். . அக்கவுண்டன்ட் முகத்தை பார்த்தவுடன் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்று எஸ் எல் பைரப்பாவிற்குத் தோன்றுகிறது. ஆனால் எங்கே என்றுதான் நினைவிற்கு வரவில்லை. தான் ஒரு நடுத்தரவர்க சம்பளதாரர் என்று எவ்வளவோ கூறிய நிலையிலும் அந்த அக்கவுண்டன்ட் வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று எஸ் எல் பைரப்பா அவர்களை மிகவும் வற்புறுத்த வேறு வழியே இல்லாமல் இவரும் சம்மதிக்கிறார். ஒரு நாள் காலை தாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு எஸ் எல் பைரப்பா அவர்கள் சென்றபோது அககவுண்டன்ட் வர காலதாமதம் ஆகிவிட்டது. 13 நிமிடங்கள் கால தாமதமாக வங்கிக்கு வந்த அந்த இளம் அதிகாரி அங்கிருந்த வாடிக்கையாளர்கள் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு தம்முடைய பணியை ஆரம்பிக்கிறார். அப்போதுதான் அந்த இளம் அதிகாரி முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் மகன் என்று எழுத்தாளர் எஸ் எல் பைரப்பா அவர்களுக்குத் தெரிய வருகிறது.
இவர்கள் வாழ்ந்தார்கள்,
இவர்களும் வாழ்ந்தார்கள்!
(பித்தி என்ற பெயரில் வெளிவந்துள்ள எஸ்எல் பைரப்பா அவர்களின் சுயசரிதை பக்கம் 490,i 492)
Comments
Post a Comment