மழையில் நனைகிறார். எஸ். ரா

முன்பு சாருவிற்கு நடந்தது இப்போது எஸ்ராவிற்கு நடக்கிறது. யாருக்கு நடந்தாலும் எனக்கு சந்தோஷம்தான். ஏறக்குறைய ஓராண்டு இருக்கும். சாரு கவிதைகளாக எழுதி அவருடைய இணையதளத்தில் வெளியீட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அவருடைய இணையதளத்தில் ஒரு கவிதை பிரசுரமாகியிருக்கும். தற்போது எழுத்தாளர் எஸ்.  ரா வின் சிறுகதைகள் தொடர்ந்து  அவருடைய இணையதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
      எழுத்தாளர் எஸ். ரா அவர்களின் சிறுகதைகளில் கிராமம் என்றும் நகரம் என்றும் சொல்ல முடியாத சிற்றூர்கள், அங்கு எளிய நிலையில் வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கை ஒருவித மாயத்தன்மையுடன் புனைவாகிறது. உதாரணமாக கிளி ஜோதிடம் சொல்லும். ஒருவருடைய கிளிக்கூண்டு காணாமல் போகிறது. ஒரு புதிரான முறையில் அது திரும்பக் கிடைக்கிறது. ஓராண்டு  முன்பு பணியில் இருந்து ஓய்வு பெறும் ஓர் அரசு அதிகாரியின் வாழ்க்கையை எஸ். ரா எழுதிக் காட்டியிருந்தார். அவ்வாறே ஒரு தங்கும் விடுதியில் காவலராக பணிபுரியும் ஒருவரின் கதையையும்  எழுதியிருந்தார்.  
இப்படி பெரும்பாலும் நம் கண்களில் படாத எளிய மனிதர்களின் வாழ்க்கைத் தருணங்கள். அவர்களுக்கும் சந்தோஷங்கள் துயரங்கள் எல்லாம் இருக்கின்றன. கிளி சொல்லாதது கதையில் கிளியும் அதை வளர்ப்பவரும் சேர்ந்து அருவியில்  குளிக்கிறார்கள்.   கிளியும் அதனை வளர்ப்பவரும் அருகருகே பேருந்தில் உட்கார்ந்து பயணம் செய்கிறார்கள். இப்படி சாதாரண வாழ்க்கை ஒருவித மாயத்தன்மையில் எஸ் ரா அவர்களால்  சொல்லப்படுகிறது.  கிளி சொல்லாதது ஒரு நல்ல சிறுகதை. 
நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். 

Comments

Popular posts from this blog

அந்தக் கரம் அந்த மனம்

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்