Posts

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை

எங்களுடைய கம்பராமாயண கூட்டு வாசிப்பு சென்ற ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 11 2026 அன்று நிறைவடைந்தது. இன்று அக்டோபர் 18 காலை ஜூம் செயலி வாயிலாக யுத்த காண்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை நண்பர்கள் வாசித்தார்கள். ஒவ்வொருவரும் காப்பியமாந்தர்களின் மனநிலையை அவ்வாறே கொண்டு வந்து நிறுத்தினார்கள் என்பது சற்றும் மிகையான கூற்றல்ல. இது ஓர் ஐந்தாண்டுத் தவம். எழுத்தாளர் பார்கவி,, நண்பர் ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் குன்றாத ஊக்க விசை இந்த வெற்றியின் பின்னணியில் உள்ளது. உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து நண்பர்கள் இணைந்திருந்தார்கள். நண்பர்கள் சிலருக்கு  நள்ளிறவு என்றாலும் சிறிதும் அயர்வின்றி வாசிப்பில் பங்கேற்றார்கள்.                                     ஒரு பெருங்கனவின் நிறைவுத் தருணம்! அடுத்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 25ஆம் தேதி நாங்கள் நண்பர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடும் நோக்கில் ஒரு நேர் சந்திப்பிற்கு                               ...

குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் The clockwork Muse நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறேன்

எழுதுவது எப்படி என்று கற்பிக்கும் நூல்கள் மீது எனக்கு ஈடுபாடு அதிகம். கல்விப்புல எழுத்துமுறையைக் கற்பிக்கும் நூல்களைப் பார்வையற்றவர்களுக்காக நடத்தப்படும் Bookshare.iog  என்ற இணைய நூலகத்திலிருந்து தேடித்தேடி வாசித்திருக்கிறேன். தற்போது கிடைத்த நூல் Eviater zerubavel எழுதிய The clockwork  Muse  என்பதாகும்.      படைப்பாற்றல் தானே பொங்கி ப் பிரவாகிக்கும் என்ற கூற்றை இந்த நூல் மறுக்கிறது. மாறாக, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து திட்டமிட்டு முயன்று நாம் எழுதினால் நம் எழுத்தின் தரம் மற்றும் அளவு இரண்டுமே அதிகமடையும் என்று இந்த நூல் வாதிடுகிறது.              சமூகவியல் பேராசிரியராகிய  ஈவியாடர் ஸெருபவெல் எழுதிய   The Clockwork Muse என்ற நூல் 5 இயல்களைக் கொண்டுள்ளது. முதல் இயல் ஆமை முயல் கதையின் அமெரிக்க வடிவமாக உள்ளது. ஆமை முயலை முந்துவது போன்று நாமும் தொடர்ந்து முயன்றால் நிறைய எழுதலாம் என்று இந்த இயல் கூறுகிறது. இரண்டாவது மற்றும் நான்காவது இயல்கள் பெரிய எழுத்துத் திட்டங்களை மேற்கொள்ளும்போது முன்னெடுக்கும் போது எவ்வாறு நேரத்த...

பீபத்சம் என்னும் சுவைக்கு நவீன இலக்கியத்தில் ஓர் எடுத்துக்காட்டு

ஒன்பது சுவைகளில் பீபத்சம் எனப்படும  அருவருப்புச் சுவையும் ஒன்று. ஓர் கலைப்படைப்பை அனுபவிக்கும் போது  அனுபவிப்பவர்களின் உள்ளத்தில் ஏற்படும் உணர்வே சுவை. சுவை மறைமுகமாகத் தோன்றுகிறது. இதனைத் தோற்றுவிப்பது உணர்வு(பாவ). உணர்வு கலைப்   படைப்பில் மறைமுகமாகவே தோற்றுவிக்கப்படுகிறது. நேரடியாக அல்ல, மறைமுகமாகத்தான் உணர்வு தோன்றுகிறது. உணர்வை மறைமுகமாகத்  தோற்றுவிப்பவை இரண்டு, 1. உணர்வுக்குரிய சூழல்,, இது விபாவா எனப்படுகிறது.  உணர்வின் வெளிப்பாடுகள். இதற்கு அனுபவ என்று பெயர். . சூழலும் விளைவுகளும் ஒன்றுசேர உணர்வு தோன்றுகிறது.   அருவெறுப்பு என்னும் உணர்வை கலைப் படைப்பில் உருவாக்குவது கடினம், அப்படியே உருவாக்கினாலும் அதனைத் தக்க வைப்பது இன்னும் கடினம். என்பது ஸ்ரீகண்டய்யா போன்ற இந்தியக் கவிதையியலாளர்களின் கருத்து. எழுத்தாளர் இராயகிரி சங்கர் நடத்தும் மயிர் இதழில் எழுத்தாளர் அஜிதனின் சிறுகதை  வெளிவந்திருக்கிறது. (பிப்ரவரி 2025)   ஓர் இந்திய ஆன்மீக அனுபவம் என்பது சிறுகதைத் தலைப்பு.  அறுவெருப்புச் சுவை உணர குறைவாகவே கிடைக்கும் எடுத்துக்காட்டுகளின் ப...

ஹய்ய

சென்னையிலிருந்து மைசூர் பயணம். சதாப்தி எக்ஸ்பிரஸில் 22 ஜூன் 2026 அன்று சென்றேன். காலைச் சிற்றுண்டி, காப்பி எல்லாவற்றிற்கும் சேர்த்தே முன்பதிவு செய்துவிட்டோம்.  எங்களுக்கு  இது போன்ற சற்று வசதியான பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதிலும் நடைமுறை சார்ந்து சில நெருக்கடிகள் இருக்கின்றன.              அவர்கள் கொடுக்கும் உணவுப் பொட்டலங்களைச் சரியாகப் பிரிக்க வேண்டும். பக்கத்து இருக்கையில்  உட்கார்ந்திருப்பவர் மீது பட்டுவிடக்கூடாது.. கஷ்டம் தான். இதன் காரணமாகவே பெரும்பாலான பயணங்களில் எதுவும் சாப்பிடுவதில்லை.            மைசூர் பயணத்தின் போது ஒரு பையன் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான். நீங்கள் எதுவரை போகிறீர்கள் அங்கிள் என்று கேட்டான். நான் புரிந்து கொண்டு உங்களுக்கு ஜன்னல் இருக்கை வேண்டுமா என்று கேட்டேன். ஆமாம் என்று சொன்னவுடன் கொடுத்துவிட்டேன். காலை 10 மணி 20 நிமிடங்களுக்கு பெங்களூர் ரயில் நிலையம் வரும். என்னைக் கொஞ்சம் எழுப்பி விட முடியுமா அங்கிள் என்று கேட்டான். சரி என்று சொல்லி அலாரம் வைத்துக் கொண்டேன்.  எ...

அசைவறு மதி

பழனிக்குமார் எழுதும் சுய முன்னேற்றத் தொடர் உயிர்மை  இணையதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அசைவருமதி என்று பெயர்.  ஏப்ரல் 25 2026 அன்று நான் வாசித்தபோது 17 கட்டுரைகள் வெளியாகியிருந்தன. பழனிக் குமார் அறிவுரை மழை பொழியாமலும் வாசகர்களைச் சிரிக்க வைக்கிறோம் என்று அசட்டுத்தனம் காட்டாமலும் சுவாரஸ்யமாக எழுதுகிறார்.        ஓர் எடுத்துக்காட்டு.        ஓர் செயலை நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். முதல் நாளில் உற்சாகமாக ஆரம்பித்தோம். நம்முடைய உற்சாகம் நாட்கள் செல்லச் செல்ல குறைந்து விடுகிறது. நம்முடைய முதல் நாள் உற்சாகத்தை மறுபடியும் எவ்வாறு திரும்பப் பெறுவது? பழனிக் குமார் விளக்குகிறார்.      நம்முடைய வாழ்வில்  நாம் ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்கும் போது குழந்தை நிலை, மத்திய வயது நிலை, முதுமை நிலை, நிபுணத்துவ நிலை  இவற்றில் ஒரு நிலையில் அமைகிறோம் என்கிறார் பழனிக் குமார். குழந்தை நிலையில் ஒரு செயலைச்  செய்யும் போது நம்மிடம் அச்சமும் படபடப்பும் இருக்கின்றன. ஆனால் அவற்றை விடவும் செயலை சிறப்பாக மேற்...

கவிதை எழுதச் சொல்லும் ஜான் சுந்தரின் கவிதைகள்

        இலக்கியம் வாசிப்பதன் பயனாக அழகியல் அனுபவம் கிடைக்கலாம், ஆன்மீகப் பிரக்ஞை மேம்படலாம். இவற்றுடன் எழுத வேண்டும் என்ற அகத்தூண்டுதல்களையும் இலக்கிய படைப்புகள் சில நேரம் வழங்கவும் செய்யலாம். இவ்வாறு அகத் தூண்டல்களை வழங்கும் கவிதைகளை எழுதக்கூடியவர் ஜான் சுந்தர்‌          பொதுவாகவே அகம் நோக்கி அதிகம் பேசும் நம்முடைய பெரும்பாலான கவிதைகள் இடையே இவருடைய படைப்புகள் புறம் நோக்கிப் பேசுபவை. .  இசை, இளங்கோ கிருஷ்ணன் இவர்களின் கவிதைகளில் இடம்பெறும் புற உலக காட்சிகள் தான் ஜான் சுந்தர் கவிதைகளிலும் இடம்பெறுகின்றன.            ரவிக்கைச் சுகந்தம் என்னும் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பில் வெளிவந்துள்ளது.     ஏ டி எம் வளாகத்தைக் காவல் காப்பவர், பெயிண்ட் அடிப்பவர், என கீழ் நடுத்தர மக்களின் பாடுகளை எழுதுகிறார். கவிதைகளில்  உணர்ச்சியை மீட்டும் இவருடைய முயற்சிகள் பிரான்சிஸ் கிருபாவையும் ஞாபகப்படுத்துகின்றன.‌ ஓர் எடுத்துக்காட்டு.     ஏதிலிகளின் ஆண்டவரே     உமது ஜெபக்...

முப்பத்தாறு ரத்தினங்கள்

மதிப்பிற்குரிய மூத்த எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் கிழக்கு டுடே இதழில் முப்பத்தாறு ரத்தினங்கள் என்ற பெயரில் தொடர் எழுதுகிறார்கள். முதன்மையான நாவல்களை அறிமுகப்படுத்தி அவற்றின் கலைப் பெறுமதியை  ஆராயும் தொடர். . எஸ் வி வி , அனுத்தம்மா என 50களில் செயல்பட்ட எழுத்தாளர்களின் முதன்மை படைப்புகள், அவர்களின் இலக்கியச் சாதனைகள் என கட்டுரைகள் அமைந்துள்ளன. முதன்மையான ஒன்றை நுட்பமாகச் சொல்லிவிட்டு முதன்மையற்றவற்றை மௌனமாகக் கடந்து விடுவது எழுத்தாளர் எஸ் வி வி அவர்களின் இயல்பாக உள்ளது. அவ்வாறே கதை மாந்தர்கள் மீது உளவியல் வெளிச்சத்தைப் பாய்ச்சாமல் கதைச்சூழலைப்  புரியவைக்க  உளவியலின் ஒளியைப் பயன்படுத்துவது அனுத்தமா அவர்களின் கலைத் திறனில் மிளிர்கிறது. இத்தகைய கட்டுரைகளின் பெரும் பயன் என்பது இவை நாம் அறியாதவாறு நம்முடைய ரசனைத் திறனை மேம்படுத்தி விடும் என்பது தான் . நண்பர்களுக்குப்  பரிந்துரைக்கிறேன். 

சுய முன்னேற்ற நூல்களும் நானும்

சுய முன்னேற்ற நூல்களுக்கும்  எனக்கும் நடுவில் அமைந்த உறவு விந்தையானது. 20 களில் என்னுடைய  நூலக அடுக்கில் நிறைந்திருந்த சுய முன்னேற்ற நூல்களை  நினைத்துப் பார்க்கிறேன். வாழ்க்கையில் முன்னேற 30 நிமிடங்கள்  என்பது முதலாக உங்களுக்குள் இருக்கும் காந்த சக்தியை பயன்படுத்துவது எப்படி?  முதலிய  புத்தகங்கள். 30 களில் எனது மனப்போக்கு தலைகீழாக மாறியது. சுய முன்னேற்ற நூல்களைப் படித்து மேம்படுத்திக் கொள்ளும் அளவுக்கு எனக்குரிய சிக்கல்கள் எளிமையானவயா என்ற கேள்வி.  அதன் பிறகு சுய முன்னேற்ற நூல்களைப் பற்றியும் அவற்றை வாசிப்பவர்கள் குறித்தும் மெல்லிய ஏளனம். ஆனால் 40 களில் மறுபடியும் சக்கரம் சுழன்றுவிட்டது.  Book share. Org என்ற இணைய முகவரியில் செயல்படும் நூலகம் உலகெங்கும் வாழும் பார்வையற்ற வாசகவர்களின் சொர்க்கம்.  பணி வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக நான் மிகுந்த மனச்சோர்வுக்கு உட்பட்டிருந்த காலம். அப்போது ஒரு நாள் அந்த நூலகத்தில் Michael D Yakub என்ற மருத்துவர் எழுதிய depression is contagious மனச்சோர்வு  பரவக்கூடியது என்ற நூல் வாசிக்கக் கிடைத்தது. ...

பேயோட்டும் வழி

தகவல் தொடர்பு சாதனங்கள் நம்மை எந்த அளவிற்கு இணைக்கின்றனவோ அதே அளவிற்கு சில புதிய சிக்கல்களையும் கொண்டு வருகின்றன என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் இந்தச் சிக்கலிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்று தான் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நானும் இந்தப் பலரில் ஒருவன் தான். விலைமதிப்பற்ற பொழுதுகள், படைப்புத்தருணங்கள் அலைபேசி திரையில் வரும் சில செய்தி அறிவிப்புகளால் வீணாகியிருக்கின்றன.  நானும் இந்தச் செய்தி அறிவிப்புகளை என் அலைபேசியின் ஹோம்ஸ்கிரீனிலிருந்து விலக்க என்னென்னவோ முயற்சிகள் செய்து பார்த்தேன். மாணவர்களையும் கேட்டேன். எதுவும் நடக்கவில்லை.  இன்று அபிஷேக்கிடம் கேட்டபோது அவன் இந்த பேயை மரத்தில் எப்படி ஆணி அறைந்து கட்டி வைப்பது என்று அதனிடமே கேட்டான். google அறிவிப்புகளை எப்படி நிறுத்துவது என்று கூகுள் செய்து கேட்டான். என்னை இப்படிக்கட்டிப் போடலாம் என்று பேயே வழியையும் சொல்லிக் கொடுத்தது.  நம்முடைய அலைபேசியில் உள்ள கூகுள் அப்ளிகேஷனை திறக்க வேண்டும். அதில் செட்டிங்ஸ் என்ற பகுதி இருக்கும். அதற்குள் செல்ல வேண்டும். அதில் அதர்ஸ் என்ற பகுதி இருக்கும். அதற்குள்ளும் செல்ல வேண்டும். அதி...

இவர்கள் வாழ்ந்தார்கள்

எஸ் எல் பைரப்பாவின் சுயசரிதையில் இப்படி ஓர் இடம் வருகிறது. அவருடைய வீட்டிற்கு இரண்டு இளம் அதிகாரிகள் வருகிறார்கள். ஒருவர் வங்கியின் மேலாளர், மற்றொருவர் அக்கவுண்டன்ட். . அக்கவுண்டன்ட் முகத்தை பார்த்தவுடன் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்று எஸ் எல் பைரப்பாவிற்குத் தோன்றுகிறது. ஆனால் எங்கே என்றுதான்  நினைவிற்கு வரவில்லை. தான் ஒரு நடுத்தரவர்க சம்பளதாரர் என்று எவ்வளவோ கூறிய நிலையிலும் அந்த அக்கவுண்டன்ட் வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று எஸ் எல் பைரப்பா அவர்களை மிகவும் வற்புறுத்த வேறு வழியே இல்லாமல் இவரும் சம்மதிக்கிறார். ஒரு நாள் காலை தாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு எஸ் எல் பைரப்பா அவர்கள் சென்றபோது அககவுண்டன்ட் வர காலதாமதம் ஆகிவிட்டது. 13 நிமிடங்கள் கால தாமதமாக வங்கிக்கு வந்த அந்த இளம் அதிகாரி அங்கிருந்த வாடிக்கையாளர்கள் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு தம்முடைய பணியை ஆரம்பிக்கிறார். அப்போதுதான் அந்த இளம் அதிகாரி முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் மகன் என்று எழுத்தாளர் எஸ் எல் பைரப்பா அவர்களுக்குத் தெரிய வருகிறது.  இவர்கள் வாழ்ந்தார்கள்,  இவர்...

அந்தப் புறாக்கள்

என்னுடைய கல்லூரிக் காலகட்டம். என் ஆசிரியர் சா. பாலுசாமி அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் எழுத்தாளர் ஜி நாகராஜன் குறித்து ஓர் உரையாற்றினார். தற்செயலாக ஒரு நாள் ஆசிரியர் இல்லத்திற்குச் சென்றிருந்தபோது  கட்டில் மீது காலச்சுவடு இதழ்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.                         காலச்சுவடு இதழை நான் முதலில் பார்த்த ஞாபகம் அதுதான். என்னுடைய முதுகலைக் காலகட்டத்தில் காலச்சுவடு இரு மாத இதழாக மறுபடியும் வெளிவரத் தொடங்கியிருந்தது.            அவ்வப்போது காலச்சுவடு இதழை வாசிக்க முயன்றதுண்டு. அண்மையில் ஓராண்டு சந்தா கட்டி இணைய வழியில் இதழை வாசித்து வந்தேன். ஆனால்  தொடர்ச்சி விடுபட்டுவிட்டது. இப்போது முயன்று ஐந்தாண்டு சந்தா கட்டிவிட்டேன். ஓர் இலக்கிய இதழ் தொடர்ந்து வாசிக்க கிடைப்பதென்பது மகிழ்ச்சியான விஷயம் இல்லையா,  என் மகிழ்ச்சியை அதிகப்படுத்துவது போல  எழுத்தாளர் எம் கோபாலகிருஷ்ணன் எழுதிய முடிய சாளரம் என்ற சிறுகதை மே மாத இதழில் வெளிவந்துள்ளது.    ...

கையசைத்துச் செல்கிறது காலம்

ராஜீவ் காந்தி படுகொலை நடைபெற்ற காலத்தில் வந்த தேர்தல் முடிவுகளையொட்டி ஜெயலலிதா முதலமைச்சரானார். தேர்தல் முடிவுகளை வானொலியில் கேட்டுவிட்டு வந்து நான் என் அப்பாவிடம் பரபரப்பாகக் கூறினேன். அப்பா வரட்டும்,வந்து ஆட்சி செய்து காட்டட்டும் ! என்று எரிந்து விழுந்தார்.           அடுத்த தேர்தலுக்குப் பிறகு விஜய் ஆட்சிதான் ! என்று என் மகன் மூன்று மாதங்களுக்கு முன்பு தெரிந்தோ தெரியாமலோ சொன்னபோது எனக்கும் எரிச்சலாக இருந்தது என் அப்பாவைபோல!  அப்பாவின் இளம் வயதிலேயே அவருடைய அப்பா ‌ காலமாகிவிட்டார். அறிஞர் அண்ணா இறந்த நாளில் அம்மாவிடம் சொல்லிக் கொள்ளாமலேயே ஒரு லாரியில் தொற்றி ஏறி ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள மண்டபம் கேம்ப் என்ற ஊரிலிருந்து சென்னைக்கு வந்து அண்ணாவின் உடலைப்  பார்த்துவிட்டுப் போன என்னுடைய அப்பாவைப்  பற்றி அலுவலகத்திலேயே சட்டையை கழற்றி விட்டு சந்தியா வந்தனம் செய்யும் அளவு மரபு வழிப்பட்ட என்னுடைய தாத்தா அறிந்திருந்தால் என்ன செய்திருப்பார், என்னைப் போலவும் என்னுடைய அப்பாவை போலவும் அவரும் எரிச்சலடைந்திருப்பாரா என்ன?     எங்கள் வீட்ட...

சிந்தை கவர வேண்டும் சிந்தை

அருஞ்சொல் இதழ் நின்றபோது மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அது தொடர்பாக இதே வலை பக்கத்தில் ஒரு சிறு குறிப்பையும் எழுதியிருந்தேன். புதிய தலைமுறை குழுமம் சார்பில் சிந்தை என்ற இதழ் தொடங்கப்பட்டிருப்பதை மிகவும் அண்மையில் தான் அறிந்து வாசிக்கத் தொடங்கினேன். அருஞ்சொல் இதழில் இடம்பெற்ற அதே வகை உள்ளடக்கங்கள். மெட்ராஸ் பேப்பர், அருஞ்சொல் ஆகிய இதழ்களில் வெளிநாட்டு நிகழ்வுகள் தொடர்பான கட்டுரைகளை விரும்பி வாசிப்பது என் வழக்கம்.  இன்று மே 3. . இன்று மட்டும் அருஞ்சொல் இதழில் இரண்டு கட்டுரைகள் வந்திருக்கின்றன.‌ தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு பெரிய சக்தியாக நடிகர் விஜயுடைய கட்சி இருக்கும் என்ற பொருளில் இதழியலாளர் திரு. சமஸ் கட்டுரை எழுதியிருக்கிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு திமுக மீதான விமர்சனம் சமஸ் எழுத்துக்களில் தற்போது கூடுதலாகவே இருக்கிறது.. இது வரவேற்கத்தக்க நிகழ்வு. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாரும் ஜனநாயகத்தில் இருக்க முடியாது என்ற நம்பிக்கையே நம்மைத் தொடர்ந்து செலுத்தும் உந்து சக்தியாக ஜனநாயகத்தில் உள்ளது.           அருஞ்சொ...

நமக்குக் கேட்கும் சாதனாவின் குரல்

இந்தக் குறிப்பு ஸ்ரீ சத்யானந்தர் மரபார்ந்த யோக மையத்தின் சார்பில் யோகப் பயிற்சி செய்யும் மாணவர்களை மனத்தில் இருத்தி எழுதப்பட்டுள்ளது. மற்ற நண்பர்கள் தவிர்த்து விடலாம்.  ஒவ்வொரு நாளும் ஒரு யோகமாணவர்   ஆசனம், பிராணாயாமம்,  பிரத்யாகாரம் என்று யோகப் பயிற்சி செய்து வருகிறார். ஆனால் சில நாட்கள் பயிற்சிகளை முறையாக செய்ய முடியவில்லை. அப்போது என்ன நிகழும் என்பதற்கு என்னளவில் சில அவதானிப்புகளை முன்வைக்கமுடியும்.  1. தொடக்க காலத்தில் பயிற்சி செய்யும் போதும் மாற்றங்களை நம்மால் எளிதில் கண்கூடாக பார்க்க முடியாது.. இதற்கு நானே ஓர் எடுத்துக்காட்டு. தொடக்கத்தில்   பயிற்சி செய்த நாட்களிலும் மனச்சோர்வை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அது மெல்ல மெல்ல மாறும் என்பது அப்போது எனக்குத் தெரியாது, ஆனால்  அது  மாறியது .   2. சிறிது காலம் கழித்து உடல் மற்றும் மன நிலைகளில் பயிற்சி செய்யும் நாட்களுக்கும் பயிற்சி செய்யாத நாட்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்  தெளிவாகத் தெரியத்  தொடங்கின. . பயிற்சி செய்த நாளுக்கும் செய்யாத நாளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஒரு ...

மழையில் நனைகிறார். எஸ். ரா

முன்பு சாருவிற்கு நடந்தது இப்போது எஸ்ராவிற்கு நடக்கிறது. யாருக்கு நடந்தாலும் எனக்கு சந்தோஷம்தான். ஏறக்குறைய ஓராண்டு இருக்கும். சாரு கவிதைகளாக எழுதி அவருடைய இணையதளத்தில் வெளியீட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அவருடைய இணையதளத்தில் ஒரு கவிதை பிரசுரமாகியிருக்கும். தற்போது எழுத்தாளர் எஸ்.  ரா வின் சிறுகதைகள் தொடர்ந்து  அவருடைய இணையதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.          எழுத்தாளர் எஸ். ரா அவர்களின் சிறுகதைகளில் கிராமம் என்றும் நகரம் என்றும் சொல்ல முடியாத சிற்றூர்கள், அங்கு எளிய நிலையில் வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கை ஒருவித மாயத்தன்மையுடன் புனைவாகிறது. உதாரணமாக கிளி ஜோதிடம் சொல்லும். ஒருவரின் கதையை எடுத்துக் கொள்ளலாம்.  ஒருவருடைய கிளிக்கூண்டு காணாமல் போகிறது. ஒரு புதிரான முறையில் அது திரும்பக் கிடைக்கிறது. ஓராண்டு  முன்பு பணியில் இருந்து ஓய்வு பெறும் ஓர் அரசு அதிகாரியின் வாழ்க்கையை எஸ். ரா எழுதிக் காட்டியிருந்தார். அவ்வாறே ஒரு தங்கும் விடுதியில் காவலராக பணிபுரியும் ஒருவரின் கதையையும்  எழுதியிருந்தார். ...

தோள் தொட்டு விரல் சுட்டும் பேருள்ளம்

குருஜி சௌந்தர் அவர்களின் மாணவனாக யோகம் பயில்கிறேன். எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவருடைய தனித்தன்மை என்ன என்பதற்கு இவருக்கு நவீன வாழ்வியலின் சிக்கல்கள் புரிகின்றன என்பதுதான் பதில். நான்  ஏறக்குறைய 1998 ஆம் ஆண்டு ஓர் ஆன்மீகப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். வாசிப்பது தொடர்பான என்னுடைய சிக்கலை அந்த பயிற்சியைக் கற்பித்த ஆசிரியரிடம் கூறியபோது அவர் ஏன் நீங்கள் படிக்க வேண்டும்? என்று எதிர்க் கேள்வி கேட்டார்.  சிறிது காலம் கழித்து வேறோர் ஆன்மீகப் பயிற்சி. என்னுடைய நிலையழிவுகளை அந்த ஆன்மீகப் பயிற்சியைக் கற்பித்த ஆசிரியரிடம் முன்வைக்கும் அளவிற்கு என்னால் அவரை அணுக முடியவில்லை.  குருஜியிடம் எது பற்றியும் பேசலாம், எப்போது வேண்டுமானாலும் பேசலாம்!  நம்முடைய குறைபாடுகளையும் பலவீனங்களையும்  சேர்த்தே அவர் நன்றாகப்  புரிந்து கொள்வார். நமக்கு தேவையானது என்ன என்பதை ஓர் ஆசிரியராக அவர் அறிவதை பலமுறை கவனித்திருக்கிறேன். நான் பதஞ்சலியின் யோக சூத்திரம் படித்துவிட்டேன் என்று ஒருவகை போலிப்பெருமிதத்தில் இருந்து வந்தேன்.  அவர் சொல்வளர்க்காடு , கிராதம், இமைக்கணம் இங்கிருந்து ...

எழுத்தாளர் சி. முத்துக் கந்தன் நாவல்கள் குறித்து பேசுகிறேன்

பேராசிரியர் சி முத்துக்கந்தன் சென்னை கிறித்துவக் கல்லூரியில் எங்களுடன் படித்தார். எங்களுக்கு சில ஆண்டுகள் இளையவர் அவர். சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழ் துறையில் பேராசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார். அடிமரம், அகன்ற பேழை, வேறு யாருக்கும் அனுமதி இல்லை ஆகிய மூன்று நாவல்களை முத்து எழுதியிருக்கிறார்.  இந்த நாவல்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது. பழங்குடி இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு எழுத்துப் பயிற்சி வகுப்புகளையும்  முத்துக்கந்தன் நடத்துகிறார்.  எழுத்தாளர் சி. முத்துக்கந்தன்  அவர்கள் தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை சார்பில்  நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று  உரையாற்றுகிறேன். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத் துறை சார்பில் ஏப்ரல் 9 வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 1 மணி அளவில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நண்பர்களைச் சந்திக்க ஆசையாக இருக்கிறது. 

அஞ்சலி; எழுத்தாளர் அரவிந்தன்

எழுத்தாளர் அரவிந்தன் இன்று மறைந்தார் என்று எஸ். ரா அவர்களின் இணையதளம் வாயிலாக தெரியவந்தது. எழுத்தாளர் சைலபதி, கவிஞர் சங்கரராம சுப்பிரமணியன் மூலம் அறிமுகம் . நாங்கள் நடத்தி வந்த சென்னை அண்ணாநகர் ஆய்வு வட்டம் சார்பில் அவருடைய பொன் நகரம் என்ற நாவலுக்காக ஒரு விமர்சனக் கூட்டம் நடத்தினோம். இரவு மங்கிய வேளையில் சென்னை அண்ணாநகர் லியோ பள்ளி வாசலில் நின்று இலக்கியம் குறித்து பொதுவாக அவர் பேசிக் கொண்டிருந்த ஞாபகம்.   அஞ்சலி ‌ 

சந்தத்தின் சிறு நடனம்

கவிஞர் வி. சங்கர் அவர்களின் சூது பவளம் கண்டேன் அல்லேன் என்ற கவிதை தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன். ஒரே ஒரு முறை மட்டும் தான் ஒவ்வொரு கவிதையையும் படித்திருக்கிறேன். அர்த்தம் பற்றி எல்லாம் அப்புறம் பேசலாம். சந்த அனுபவத்திற்காகவே ஒருமுறை படித்துப் பார்க்கலாம். நவீன கவிதைகளில் காணப்படும் ஓசை வறட்சியை இந்தத் தொகுப்பு போக்கிவிட்டது என்று கவிஞர் லட்சுமி மணிவண்ணன் அவர்கள் முன்னுரையில் கூறியிருக்கிறார். நண்பர்களுக்குப்  பரிந்துரைக்கிறேன் . 

குருஜியிடமிருந்து பெற்றுக் கொண்டது

யோகம் என்பது ஓர் எட்டு வழிச்சாலை. இயமம்  நியமம்  ஆகியவை இந்த சாலையின் முதல் இரு வழித்தடங்கள்.   தூய்மை, மகிழ்ச்சி, தவம், ஒவ்வொரு நாளும் தன்னை அறிதல், இறையாற்றலுக்குஅற்பித்தல் ஆகியவையே ஐந்து நியமங்கள் . ஒவ்வொரு நாளும் யோகமாணவன் தன்னை தன்னுள் நிகழும் மாற்றத்தை அறிந்து கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அவன் தன்னை தொகுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நனவு நிலை அனுபவங்களுடன் கனவு முதலியவற்றின் அவதானிப்புகளும் அவசியம். நாம் உண்ணும் உணவும் நம்முடைய அன்றாட அனுபவங்களும் கனவுகள் தோன்ற காரணமாகின்றன என்பது குருஜி சௌந்தர் அவர்களின் கருத்து.  உணவு எவ்வாறு கனவுகள் உருவாக பங்களிக்கின்றன என்பது குறித்து இன்னும் எனக்குச் சரியாகப் புரியவில்லை. எனவே இது தொடர்பாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னிடம் எதுவும் இல்லை. ஆனால் அன்றாட அனுபவங்களுக்கும் கனவுகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி பகிர்ந்து கொள்ள என்னிடம் சில கருத்துக்கள் உள்ளன.  ஏழு மார்ச் 2026 சனிக்கிழமை இரவு எனக்கு ஒரு கனவு வந்தது. எங்கள் அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் ராமசாமித் தெரு வீடு அது. நான் ஒரு பள்ளி மாணவன். எங்கள் வ...