சுய முன்னேற்ற நூல்களும் நானும்

சுய முன்னேற்ற நூல்களுக்கும்  எனக்கும் நடுவில் அமைந்த உறவு விந்தையானது. 20 களில் என்னுடைய  நூலக அடுக்கில் நிறைந்திருந்த சுய முன்னேற்ற நூல்களை  நினைத்துப் பார்க்கிறேன். வாழ்க்கையில் முன்னேற 30 நிமிடங்கள்  என்பது முதலாக உங்களுக்குள் இருக்கும் காந்த சக்தியை பயன்படுத்துவது எப்படி?  முதலிய  புத்தகங்கள். 30 களில் எனது மனப்போக்கு தலைகீழாக மாறியது. சுய முன்னேற்ற நூல்களைப் படித்து மேம்படுத்திக் கொள்ளும் அளவுக்கு எனக்குரிய சிக்கல்கள் எளிமையானவயா என்ற கேள்வி.  அதன் பிறகு சுய முன்னேற்ற நூல்களைப் பற்றியும் அவற்றை வாசிப்பவர்கள் குறித்தும் மெல்லிய ஏளனம். ஆனால் 40 களில் மறுபடியும் சக்கரம் சுழன்றுவிட்டது. 
Book share. Org என்ற இணைய முகவரியில் செயல்படும் நூலகம் உலகெங்கும் வாழும் பார்வையற்ற வாசகவர்களின் சொர்க்கம். 
பணி வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக நான் மிகுந்த மனச்சோர்வுக்கு உட்பட்டிருந்த காலம். அப்போது ஒரு நாள் அந்த நூலகத்தில் Michael D Yakub என்ற மருத்துவர் எழுதிய depression is contagious மனச்சோர்வு  பரவக்கூடியது என்ற நூல் வாசிக்கக் கிடைத்தது.  செயலின்றிக் கிடந்த நாட்களில் எனக்குள் அந்த நூல் விதைத்த மாற்றம் சொற்களுக்கு அப்பாற்பட்டது. 
எப்படி மனச்சோர்வு ஒரு தொற்று நோய் போல பரவக்கூடியது என்பதை அந்தப் புத்தகம் சான்றுகளுடன் விளக்க அதிர்ந்து விட்டேன். என்னையே  நம்பியிருப்பவர்களிடம் எப்படி இருட்டை பகிர்ந்து கொள்வேன்? 
அந்த சந்தர்ப்பத்தில் ஜெ தமது வாசகர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் நமது சிக்கல்கள் பெரும்பாலும் புறநிலையில்  வைத்து விவாதித்தால் தீர்க்கப்படக் கூடியவை தான் என்று எழுதியிருந்தார். இது எனக்கு பெரிய திறப்பாக இருந்தது. வேறு சொற்களில் சொல்வதாக இருந்தால் நான் நுட்பமானவன், அறியவன் என்ற அகங்காரம் சிதைந்தது. 
தொடர்ந்து கிடைத்த  ஸ்டீபன் ஆர் கோவி (  (Steven   R. Kovi)  செவன் ஹேபிட்ஸ் ஆப் ஹைலி எஃபக்டிவ் பீப்புள் ( back 7 habits of highly effective people) என்ற புத்தகம் என்னளவில் ஒரு கிளாசிக். அங்கிருந்து மார்ட்டின் இபி செலிப்மென் (Martin EP selling men)  மூலமாக. பாசிடிவ் சைக்காலஜி என்ற துறையின் முக்கிய நூல்களை வாசித்தேன். 
எனக்கு ஆங்கில நூல்கள் வாசிக்க எளிதில் கிடைக்கின்றன என்பதைத் தவிர ஆங்கில நூல்கள் மீது சிறப்பான எந்த மோகமும் இல்லை. 
அவ்வப்போது வந்து பற்றிக்கொள்ளும் செயலின்மைகள்ருந்து விடுபட இவை போன்ற நூல்கள் உதவியாக இருக்கின்றன. 
40 களிலும் இப்படிப்பட்ட நூல்களைப் படிப்பீர்களா என்ற கேள்விக்கு நம்முடைய பல சிக்கல்கள் நாம்  பொதுவாக நினைத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு நமக்கே உரிய சிக்கல்கள் மட்டுமல்ல.  என்ற அனுபவப் பாடத்தையே பதிலாகச் சொல்வேன். 
உரத்து ஒலிக்கும்,ஆசிரியரின் முழக்கங்கள், அனைத்திற்கும் ஒரே மருந்து இந்தப் புத்தகம் என்ற வகை குரல்கள் சுயமுன்னேற்ற நூல்களில் இருப்பது உண்மைதான். அதற்காக இவற்றை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதற்கில்லை என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். 

Comments

Popular posts from this blog

அந்தக் கரம் அந்த மனம்

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்