பீபத்சம் என்னும் சுவைக்கு நவீன இலக்கியத்தில் ஓர் எடுத்துக்காட்டு

ஒன்பது சுவைகளில் பீபத்சம் எனப்படும  அருவருப்புச் சுவையும் ஒன்று. ஓர் கலைப்படைப்பை அனுபவிக்கும் போது  அனுபவிப்பவர்களின் உள்ளத்தில் ஏற்படும் உணர்வே சுவை. சுவை மறைமுகமாகத் தோன்றுகிறது. இதனைத் தோற்றுவிப்பது உணர்வு(பாவ). உணர்வு கலைப்
  படைப்பில் மறைமுகமாகவே தோற்றுவிக்கப்படுகிறது. நேரடியாக அல்ல, மறைமுகமாகத்தான் உணர்வு தோன்றுகிறது. உணர்வை மறைமுகமாகத்  தோற்றுவிப்பவை இரண்டு, 1. உணர்வுக்குரிய சூழல்,, இது விபாவா எனப்படுகிறது.  உணர்வின் வெளிப்பாடுகள். இதற்கு அனுபவ என்று பெயர். . சூழலும் விளைவுகளும் ஒன்றுசேர உணர்வு தோன்றுகிறது.  
அருவெறுப்பு என்னும் உணர்வை கலைப் படைப்பில் உருவாக்குவது கடினம், அப்படியே உருவாக்கினாலும் அதனைத் தக்க வைப்பது இன்னும் கடினம். என்பது ஸ்ரீகண்டய்யா போன்ற இந்தியக் கவிதையியலாளர்களின் கருத்து. எழுத்தாளர் இராயகிரி சங்கர் நடத்தும் மயிர் இதழில் எழுத்தாளர் அஜிதனின் சிறுகதை  வெளிவந்திருக்கிறது. (பிப்ரவரி 2025)   ஓர் இந்திய ஆன்மீக அனுபவம் என்பது சிறுகதைத் தலைப்பு. 
அறுவெருப்புச் சுவை உணர குறைவாகவே கிடைக்கும் எடுத்துக்காட்டுகளின் பட்டியலில் தவறாமல் இந்த சிறுகதையையும் இணைத்துக் கொள்ள வேண்டும். சிறுகதையைப் படித்து விட்டு திரும்ப ஒருமுறை அதன் தலைப்பைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

Comments

Popular posts from this blog

அந்தக் கரம் அந்த மனம்

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்