தோள் தொட்டு விரல் சுட்டும் பேருள்ளம்

குருஜி சௌந்தர் அவர்களின் மாணவனாக யோகம் பயில்கிறேன். எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவருடைய தனித்தன்மை என்ன என்பதற்கு இவருக்கு நவீன வாழ்வியலின் சிக்கல்கள் புரிகின்றன என்பதுதான் பதில். நான்  ஏறக்குறைய 1998 ஆம் ஆண்டு ஓர் ஆன்மீகப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். வாசிப்பது தொடர்பான என்னுடைய சிக்கலை அந்த பயிற்சியைக் கற்பித்த ஆசிரியரிடம் கூறியபோது அவர் ஏன் நீங்கள் படிக்க வேண்டும்? என்று எதிர்க் கேள்வி கேட்டார்.  சிறிது காலம் கழித்து வேறோர் ஆன்மீகப் பயிற்சி. என்னுடைய நிலையழிவுகளை அந்த ஆன்மீகப் பயிற்சியைக் கற்பித்த ஆசிரியரிடம் முன்வைக்கும் அளவிற்கு என்னால் அவரை அணுக முடியவில்லை.  குருஜியிடம் எது பற்றியும் பேசலாம், எப்போது வேண்டுமானாலும் பேசலாம்! 
நம்முடைய குறைபாடுகளையும் பலவீனங்களையும்  சேர்த்தே அவர் நன்றாகப்  புரிந்து கொள்வார். நமக்கு தேவையானது என்ன என்பதை ஓர் ஆசிரியராக அவர் அறிவதை பலமுறை கவனித்திருக்கிறேன். நான் பதஞ்சலியின் யோக சூத்திரம் படித்துவிட்டேன் என்று ஒருவகை போலிப்பெருமிதத்தில் இருந்து வந்தேன். 
அவர் சொல்வளர்க்காடு , கிராதம், இமைக்கணம் இங்கிருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என்று அறிவுரை கூறினா. 
இவ்வாறு நவீன வாழ்வியலின் தேடல் எங்கிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதில் அவருக்குத் தெளிவான நிலைப்பாடு இருக்கிறது. அதேசமயம். மரபை அணுகி அறிய வேண்டும் என்பதிலும் அவருக்கு ஆழமான உடன்பாடு உண்டு. 
குருஜி அவர்கள் முன்வைக்கும் நாத யோகம் சார்ந்த மந்திர சாதனா பயிற்சி இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. 
இதுதான் சௌந்தர் குருஜி அவர்களின் தனித்தன்மை. 
இவரால் விக்யான பைரவ தந்திரத்திற்கு விளக்கம் கொடுக்கவும் முடியும், சாருவின் எழுத்து பற்றி நம்முடன் கதை பேசவும் முடியும். 
நம்மிடம் ஓர் ஆசிரியர்!  நம் சம காலச் சிக்கல்களைப் புரிந்து கொண்டுள்ள ஓர் நல்லாசிரியர்! . 
நண்பர்களே நாம் யோகம் பயில்வோம்! 

Comments

Popular posts from this blog

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்

குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் The clockwork Muse நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறேன்

குழந்தைகள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்