நமக்குக் கேட்கும் சாதனாவின் குரல்

இந்தக் குறிப்பு ஸ்ரீ சத்யானந்தர் மரபார்ந்த யோக மையத்தின் சார்பில் யோகப் பயிற்சி செய்யும் மாணவர்களை மனத்தில் இருத்தி எழுதப்பட்டுள்ளது. மற்ற நண்பர்கள் தவிர்த்து விடலாம். 
ஒவ்வொரு நாளும் ஒரு யோகமாணவர்   ஆசனம், பிராணாயாமம்,  பிரத்யாகாரம் என்று யோகப் பயிற்சி செய்து வருகிறார். ஆனால் சில நாட்கள் பயிற்சிகளை முறையாக செய்ய முடியவில்லை. அப்போது என்ன நிகழும் என்பதற்கு என்னளவில் சில அவதானிப்புகளை முன்வைக்கமுடியும். 
1. தொடக்க காலத்தில் பயிற்சி செய்யும் போதும் மாற்றங்களை நம்மால் எளிதில் கண்கூடாக பார்க்க முடியாது.. இதற்கு நானே ஓர் எடுத்துக்காட்டு. தொடக்கத்தில்   பயிற்சி செய்த நாட்களிலும் மனச்சோர்வை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அது மெல்ல மெல்ல மாறும் என்பது அப்போது எனக்குத் தெரியாது, ஆனால்  அது  மாறியது . 
 2. சிறிது காலம் கழித்து உடல் மற்றும் மன நிலைகளில் பயிற்சி செய்யும் நாட்களுக்கும் பயிற்சி செய்யாத நாட்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்  தெளிவாகத் தெரியத்  தொடங்கின. . பயிற்சி செய்த நாளுக்கும் செய்யாத நாளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஒரு யோக சாதகர் தம்முடைய அனுபவத்தில் உணர முடியும். 
3. இன்னும் சில காலம் கழித்து ஒரு குறிப்பிட்ட நாளில் முறையாகப்  பயிற்சி செய்யாமல் இரூந்த  போதும் எதிர்பாராத நல் விளைவுகள் ஏற்படும் . உதாரணமாக மார்ச் 6 2026 அன்று எங்கள் பல்கலைக்கழகத்தில் நான் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. தடைகள் வரக்கூடும் என்பதை மனத்தில் இருத்தி அதிகாலை வெகு சீக்கிரம் எழுந்து பயிற்சி செய்ய முயன்றேன். எத்தனை அலைபேசி அழைப்புகள், எத்தனை எத்தனை நெருக்கடிகள்! என்னால் பயிற்சியை முறையாக அன்று செய்யவே முடியவில்லை. ஆனால் அந்த நாளின் கட்டுக்கோப்பை என்னால் சொற்களில் விளக்கிவிட முடியாது.  இவற்றை அனுபவத்தில் மட்டுமே உணர முடியும். இதன் காரணம் என்ன? என்பதற்கு நம்முடைய முந்தைய பயிற்சிகள் காரணமாக நம்முள் சேகரிக்கப்பட்டுள்ள  பிராண ஆற்றல் தற்போது நமக்கு உதவி புரிகிறது என்பதே குருஜியின் விளக்கம். 
இப்படி ஒரு குறிப்பை நான் வலைப் பக்கத்தில் எழுதுவேன் என்று  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு  பயிற்சியைத்  தொடங்கிய நாட்களில் நினைத்திருக்கவில்லை. சாதனா நம்முடன் பேசுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் உடல்,  மனம் என எல்லா நிலைகளிலும்  நம்மைத் தகுதிப்படுத்திக் கொண்டு அதன் குரலைக் கேட்பதற்குத் தயாராகயிருக்க வேண்டும் என்பதுதான்?!  
நண்பர்களே நாம் யோகம் பயில்வோம்! 

Comments

Popular posts from this blog

அந்தக் கரம் அந்த மனம்

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்