23
23 இந்த மாதம் 23ம் தேதி இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தன. முதலாவது விஷயம் பற்றி ஊரே பேசிக் கொண்டிருக்கிறது. 24 ஆம் தேதி ஆட்டோவில் வரும்போது என்னால் ராட்டினம் கூட ஏற முடியாது நிலவை தொட்டு விட்டார்களே என்று இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு வந்ததை என் காதுகளால் கேட்டேன். கட்டற்ற நுகர்வு இந்தப் பிரபஞ்சத்தையே பெரிய சந்தை என நினைக்கும் மனநிலை, இவை எனக்கு உடன்பாடில்லை. வியாபாரத்தைத் தவிரவும் இந்த வாழ்க்கையில் சில இன்பங்கள் இருக்கின்றன என்று நம்புகிறேன். இருந்தாலும் மானுட வல்லமை மீது இது போன்ற தருணங்களில் நம்பிக்கை அதிகரிக்கிறது. ஒரு காலத்திய கொள்ளை நோய்கள் இன்று சில மாத்திரைகளில் குணமடைகின்றன. எனவே மானுடன் தனது எல்லைகளை முயன்று கடக்கும் போது சந்தோஷப்படாமல் இருக்க முடிவதில்லை. மனிதனுக்கு நிலவிலும் பிற கோள்களிலும் என்னென்ன பரிசுகள் மற்றும் சவால்கள் காத்திருக்கின்றனவோ இனிமேல் தான் தெரியவரும். இனி இரண்டாவது விஷயம். ஆகஸ்ட் 23 அன்று நமது திராவிடப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சார்பில் நடத்தப்படும் புதன் வட்ட நிகழ்வில் நமது பல்கலைக்கழக ஆய்வு மாணவர் திரு சண்முக விமல்...