ஒரு அவசரப் பிரார்த்தனை

எனக்குக் கண்பார்வை கிடையாது. அதுவும் பிறந்தது முதல். இப்போது ஒரு கூடுதல் நெருக்கடி. தமிழ் சீரியலின் அடுத்த கட்ட நகர்வை தாங்கிக் கொள்ள முடியவில்லை. 
இதுவரை நமது சீரியல் களில் கணவன் மனைவி சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது முன்னாள் கணவனும் முன்னாள் மனைவியும்   சண்டை போட்டுக் கொள்கிறார்கள். மகள் படிக்கும் கல்லூரிக்கு அம்மா செல்கிறாள் மாணவியாக.  அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அம்மாவின் முன்னாள் கணவர் அவள் வீட்டிற்கு வந்து புகார் சொல்கிறார். 
விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலைத்தான்  சொல்கிறேன். ஆகஸ்ட் 12 சனிக்கிழமை காட்சி.  பார்க்காவிட்டால் வீட்டிலிருக்கும் சிலரின் இதயம் வெடித்து சிதறிவிடும். 
இப்போது ஒரு பிரார்த்தனை. 
பாக்கியலட்சுமி சீரியல் டிவியில் வரும்போது மட்டும் எனக்குக் காது கேட்க கூடாது  

Comments

Popular posts from this blog

அந்தக் கரம் அந்த மனம்

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்