என்ன ஆகியிருப்பேன்?

என் அம்மாவுக்கு வயது 72. ஒரு பெரிய ஸ்லேட் பலகையில் அ என்ற எழுத்தை எழுதி அந்த பெரிய எழுத்தின் மேல் என்னை நூற்றுக்கணக்கான முறை எழுத வைத்து தமிழ் எழுத்துக்களை கற்றுக் கொடுத்தார். ஸ்மால் எழுத்துகள் எனக்கு சரியாக எழுத வரவில்லை என்று ஆறாம் வகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டபோது எனக்கு பக்கத்தில் உட்கார்ந்து சொல்லிக் கொடுத்தார். கல்லூரி நாட்களில் ஒவ்வொரு நாளும் எனக்காக சில மணி நேரங்கள் பாடங்களை ஒலிப்பதிவு செய்து கொடுத்தார். ஆயிரக்கணக்கான பக்கங்கள் நீளக்கூடிய ஜெயகாந்தன் நாவல்களை எனக்காக படித்து பொருத்தமான அடிக்குறிப்புகளை நான் அமைக்க உதவினார். ஒவ்வொரு நாளும் நான் படிக்க வேண்டும் எழுத வேண்டும்,என்பதில் அப்படி ஒரு ஆர்வம் அவருக்கு. 
இப்படி ஒரு அம்மாவின் மகனாகப்  பிறந்து நான் படிப்பதிலும் எழுதுவதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை படிக்காமலும் எழுதாமலும் இருந்தால் தான் ஆச்சரியம் ! 
இவரின் மகனாக பிறக்கவில்லை என்றால் என்ன ஆகியிருப்பேன்? 

Comments

Post a Comment

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்