ஈரோட்டில் சந்திக்கலாம்

எழுத்தாளர் ஜெயமோகன் முன்னெடுத்து வரும் தமிழ் விக்கி அமைப்பின் வருடாந்திர விருது வழங்கும் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் ஐந்து மற்றும் ஆறாம் தேதி  ஈரோட்டுக்கு அருகில் உள்ள  கவுண்டச்சி பாளையத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது. அதில்  இந்த வருடமும் பங்கேற்கிறேன். சென்ற ஆண்டு நண்பர் தாமரைக்கண்ணன் அறிமுகமானார். இந்த ஆண்டு எனக்கு இன்னும் பல புதிய நண்பர்கள் அமைவார்கள். மகிழ்வுடன் இணைந்து மறுபடியும் எப்போது சந்திக்க இருக்கிறோம் என்ற எதிர்பார்ப்பில் பிரிவதே கற்றவர்களின் இயல்பு என்கிறது வள்ளுவம். வாருங்கள் நண்பர்களே நாம் விழாவில் சந்திப்போம். 

Comments

Popular posts from this blog

நண்பர் சக்திவேலுக்கு வாழ்த்துகள்

அப்படி என்ன அவசரம் மாரிமுத்து அண்ணா?

தலையாலே தான் தருதலால்