Posts

Showing posts from November, 2023

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

Image
இன்று 29 நவம்பர் 2023 அன்று திராவிடப்  பல்கலைக்கழக புதன் வட்ட நிகழ்வில் நமது முதுகலை மாணவர் பி.சக்தி சுப்பிரமணியம் நாயக் தாம் மொழி பெயர்த்த சிறுகதையை வாசித்துக் காட்டினார். தெலுங்கில் இருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.சாய் வம்சி என்பவரின் சிறுகதை. புத்தக உலகு  என்பது மொழிபெயர்ப்புச் சிறுகதையின் தலைப்பு‌ . எட்டு பக்க சிறுகதை.  ஒரே நாளில் முடித்து விட்டார்.  சிறுகதையின் வடிவம் குறித்தோ மொழிபெயர்ப்பின் இயல்பு பற்றியோ விவாதத்தை பிறகு வைத்துக் கொள்ளலாம். ஒரு முதுகலை மாணவர் முயன்று செய்திருக்கும் பணியை பாராட்டும் நிமிடம் இது.  நமக்கு மேலும் ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைத்திருக்கிறார்.  மொழிபெயர்ப்பாளராக இந்த நாளை சக்தி சுப்ரமணியம் பிறந்தநாள் என்று  சொல்லிக் கொண்டாலும் பிழையில்லை.  ஒரு மொழிபெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார். 

சாட்சி 1

அடித்துக் கொட்டுகிறது மழை!  நனைந்தபடி செல்கிறது எருமை மாடு!  ( 2000க்கு முன் எழுதப்பட்டதுஒ)

முனைக அறிமுகம்

நன்கு படிக்கக்கூடிய மாணவர்கள் ஒரு தரமான முனைவர்ப்பட்ட ஆய்வேட்டை உருவாக்க ஏன் சிரமப்படுகிறார்கள் என்ற வினா வெகு நாட்களாக என்னுள் இருக்கிறது. இதற்கான காரணங்களை விவாதிக்க வேண்டும், எனக்குத் தோன்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்தத்  தொடர்.  இங்கு நான் விவாதிக்கவிருக்கும் சிக்கல்கள் பல என்னுடைய முனைவர் பட்ட ஆய்வு காலத்தில் எனக்கும் இருந்தன. நான் அவற்றுள் சிலவற்றை எவ்வாறு எதிர்கொண்டேன், வேறு சிலவற்றை இன்னும் எவ்வாறு எதிர்கொண்டிருக்கலாம் என்பதை விளக்குவதே இந்தத் தொடர்.  இந்தத் தொடரில் நான் பேசவிருக்கும் விஷயங்கள் பலவற்றை திராவிடப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களிடம் தனிப்பட்ட உரையாடல்களிலோ அல்லது பொது வெளியிலோ சொல்லியிருக்கிறேன். அவற்றை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளவே இந்த முயற்சி.  நம்முடையதாக நாம் இன்று உணரும் சிக்கல்கள் பல நமக்கு மட்டும் உரிய சிக்கல்கள் அல்ல என்பதை இப்போது அடிக்கடி உணர்கிறேன்.  கேரள மாநிலம்,பாலக்காடு மாவட்டம், சித்தூர் அரசுக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் நண்பர் க. கதிரவனும் நானும் இந்தப் பொருள் குறித்து ஒரு கட்டுரைத் தொடர் எழுதலாம் என்று திட்

எனக்குக் கிடைத்த இரு புதையல்கள்

Image
காண்டேகரின் யயாதி பற்றி பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  எழுத்தாளர் ஜெயமோகனின் கண்ணீரைப் பின் தொடர்தல் தொகுப்பிலும் யயாதி பற்றி ஒரு விரிவான கட்டுரை உள்ளது.   தர்மபுரி கல்லூரியின் மாண்பமை முதல்வர் பேராசிரியர் கோ . கண்ணன் ஒரு மிகச் சிறந்த இலக்கிய வாசகர். பார்வையற்றவர்களுள் நவீன இலக்கிய அறிமுகமும் ஈடுபாடும் கொண்ட சிலருள் ஒருவர். அவரும் கூட யயாதி நாவல் பற்றி என்னிடம் பேசியிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் யயாதி என்ற ஒரு சிறு நூல் கிடைத்தது. ஆனால் அது காண்டேகரின் நாவல் அல்ல.   ‌  இந்தியாவின்  சிறந்த  நாவல்  ஒன்றை படிக்கும் வாய்ப்பிற்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.   இதற்கிடையே  யயாதி நாவல் பற்றி வாசகர் மணிமாறன் எழுதிய கடிதத்தை ஜெ தளத்தில்  வாசித்தபோது நாவலை படிக்க வேண்டும் என்ற எண்ணம் மறுபடியும் அதிகரித்தது. தற்செயலாக கிண்டிலில்  தேடிப் பார்த்தேன். இரண்டு தொகுதிகளும் இருந்தன. உடனே வாங்கி விட்டேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தொழில்நுட்பம் எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம்!  ஒரு நாள் யயாதி பற்றிய மதிப்புரையை இந்த வலைப் பக்கத்திலே

பாரதி என்னும் நிகழ்வு

Image
பாரதி பற்றி விடுதலைப் போராட்ட வீரர் திருமிகு வ. ரா அவர்கள் எழுதிய நூல் மகாகவி பாரதியார். பாரதியாரின்  வாழ்வை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இந்த புத்தகத்தில் வ.ரா முன்வைத்துள்ளார். பக்தன் தெய்வத்தை ஆராதிப்பது போல் பாரதியை அவர்  கொண்டாடுகிறார். 28 அத்தியாயங்களில் ஆற்றோழுக்கான நடையில் பாரதியின் ஒட்டுமொத்த வாழ்க்கை குறித்த சித்திரத்தை இந்த புத்தகம்  வெளிப்படுத்துகிறது.  தாயில்லாப் பிள்ளையாக,  தந்தையின் பரிவைப் பெற்ற பையனாக,  மொழியை கற்றுக் கொள்வதில் அளவு கடந்த திறமை கொண்ட  இளைஞனாக பாரதியின் தொடக்க கால வாழ்க்கை விளக்கப்பட்டிருக்கிறது.  ஜி. சுப்பிரமணிய ஐயர், ரங்கசாமி அய்யங்கார், வெல்லச்சு கிருஷ்ணசாமி செட்டியார் முதலிய அற்புதமான நண்பர்களால் பாரதி சூழப்பட்டிருக்கிறார்.  இந்த புத்தகம் பாரதியின் புதுவை வாழ்க்கை பற்றி மிக விரிவாக விளக்குகிறது. பாரதியின் வாழ்வில் படைப்பூக்கம் மிக்க காலகட்டம் என்று புதுவை  காலகட்டத்தையே சொல்ல முடியும்.  பாரதிக்காக வ.ரா மொழியில் அமைத்த பேராலயம் இந்நூல். . இந்த   ஆலய மூலஸ்தானத்தில் பாரதி இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதேசமயம் அரவிந்தர், வ. வே.சு ஐயர் மு

நான் உரையாற்றுகிறேன்

சென்னையில் செயல்பட்டு வரும் சங்கத்தமிழ் பூங்கா என்ற அமைப்பின் சார்பில் நவம்பர் 20 மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் நான் உரையாற்றுகிறேன். நிகழ்ச்சி இணையம் வாயிலாக நடைபெறுகிறது. பாரதி என்னும் மானுடன் என்பது தலைப்பு. நிகழ்விற்கு என்னை அழைத்த நல்லாசிரியர்  திருமதி கற்பகம் அவர்களுக்கு நன்றி. இணைப்பு கீழே.  https://us02web.zoom.us/j/5342209152?pwd=MVAzTVRKazNlVzZ6SU0xOS9rUm5HUT09 Zoom 534 2209152 passcode 123

எனக்குப் பிடித்த கிழக்கு டுடே

பத்ரி சேஷாத்ரியின் கிழக்கு பதிப்பகம்சுமார்  10 வருடங்களுக்கு முன்பு ஒலி நூல்களை நிறைய வெளியிட்டது.  மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் என்ற புத்தகம். அதை திரு சால்ஸ் அவ்வளவு அழகாக வாசித்திருப்பார். மதனின் நடை சால்சின் குரல் இரண்டும் சேர்ந்து மொகலாயக் காலகட்டத்திற்கே  நம்மை கூட்டிச்செல்லும்..  என் அப்பா சிலாகித்த புத்தகம் அது. . எனக்கும் என்னைப் போன்ற மற்ற பார்வையற்ற நண்பர்களுக்கும் கேட்கக் கிடைத்தது.  திராவிடப் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்த எழுத்தாளர் சா கந்தசாமி  அவர்களுக்கு என்னை மிகவும் பிடித்துப் போய்விட்டது. குப்பத்திலிருந்து சென்னை சென்றதும் தம்முடைய சிறுகதை ஒலிப் புத்தகத்தை எனக்கு அனுப்பிவைத்தார்.  படிப்பது பரவசம், கேட்ப்பது அதைவிட ! என்ற வாசகம் ஒவ்வொரு ஒலிப் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கும்.  இப்படி தனது ஒலிப்புத்தகங்கள் வாயிலாக கிழக்கு பதிப்பகம் அந்தக் காலகட்டத்தில் ஒரு புதிய முன்னெடுப்பைச் செய்தது.   நிறைய பேர் ஒலிப்புத்தகங்களை சட்டவிரோதமாக பிரதியெடுத்து சுற்றுக்குவிட்ட  காரணத்தினால் தொடர்ந்து  இந்தமுயற்சி  கைவிடப்பட்டதாக நினைக்கிறேன்.  கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் கி

நெடுஞ்சாலையில் நின்றிருக்கும் அடர் வண்ணமாருதி

நேற்றிரவு குப்பத்திலிருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தோம். வேலூரைத் தாண்டியவுடன் மழை பிடித்துக் கொண்டுவிட்டது. வண்டியின் முன்பகுதிக் கண்ணாடியில் படியும் மழை தண்ணீரைத் துடைத்து விடும் வைப்பர் சரியாக வேலை செய்யவில்லை.  நண்பர் முனியப்பன் சிறப்பாகவே ஓட்டுவார். நேற்று அவருக்கும் எதிரில் வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியவே இல்லை. அந்த அளவு மழை அடித்துக் கொட்டியது.  எனக்கு சுஜாதாவின் சிவப்பு மாருதி என்ற சிறுகதை நினைவுக்கு வந்துவிட்டது. நம்முடையதும் மாருதி கார் தான். சிவப்பு நிறம் இல்லை என்றாலும் அடர் நிறம் .  பெங்களூரூவிலிருந்து சென்னைக்கு காரில் வரும்   குடும்பம் சந்திக்கும் நெருக்கடி தான் கதை. குப்பம் கூட  பெங்களூருக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது. அந்தக் கதையில் வருபவர்கள் போல நானும் ஒரு திருமணத்தில் பங்கேற்கவே சென்னை வந்து கொண்டிருக்கிறேன்.  எனது மூத்த மகன் அபிஷேக் காரின் வலது பக்க கதவைத் திறந்து சாலையில் இறங்கி பழுது நீக்குவது பற்றி நண்பர் முனியப்பனிடம் பேசிக் கொண்டிருந்தான். கார் நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறது. ஏதாவது நடக்கக் கூடாதது நடந்து விட்டால் என்னால் என்னை ம

பல்கலைக்கழகத்தில் பேசினேன்

பல்கலைக்கழக புதன் வட்ட நிகழ்வில் நவம்பர் 8 அன்று   Deep work Rules for focus in the destructed world என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்திப் பேசினேன்.  ஒன்பதாம் தேதி பேசுவதாகத் தான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால்  ஒரு நாள் முன்பே  பேசி விட்டேன். இந்த புத்தக அறிமுகம் மாணவர்களுக்கு தீபாவளி பரிசு என்று சொல்லியிருந்தேன். பரிசு தருவது இன்பம். முன்கூட்டியே கொடுக்கும் வாய்ப்பமைந்தால் பேரின்பம்!  புத்தக அறிமுகத்தை விரைவில் எழுத வேண்டும். 

ஒரு கவிதை நிகழ்ந்திருக்கிறது

எழுக என்றேன்  எழுந்தன மலைகள் விரிக என்றேன்  விரிந்தன வெளிகள் சுழல்க என்றேன்  சுழன்றள கோள்கள் ஆகுக என்றேன்  ஆனது உலகம் ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிறபோது என்ற கவிஞர்   பொன்முகலியின் தொகுப்பிலிருந்து  தேவ தேவன் மற்றும் இசை இருவரின் செல்வாக்கு பொன்முகலியிடம் இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. நவீன ஆணுக்குரிய அத்தனை சவால்களும் நவீனப் பெண்ணுக்கும் உரியவை என்பது இந்த தொகுப்பில் நிறுவப்படுகிறது. அந்தரங்கமான அலைக்கழிப்புகளும் பதற்றங்களும் உடைய ஒருத்தி நம்முடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் மனப்பதிவை பொன்முகலியின்  கவிதைகள் அளிக்கின்றன.  ஆகுக என்றேன் ஆனது உலகம் (உலகம் என்பது நாமே உருவாக்கிக்கொள்ளும்  ஒன்றுதான் ஒப்புக்கொள்கிறேன். ) இந்த நாள் கொண்டாட்டத்துக்குரியது. காரணம், நமது முன்னால்  ஒரு கவிதை நிகழ்ந்திருக்கிறது! 

பனிமலர் வாழ்க!

இன்று  எங்கள் புதன் வட்ட நிகழ்வில் வ பனிமலர் துப்பட்டா போடுங்கள் தோழி என்ற கீதா இளங்கோவனின் நூலை அறிமுகப்படுத்தினார்.  மலர் நமது தமிழ்த்துறையின் ஆய்வு மாணவி. நூல் குறித்த தமது கருத்துக்களை பனிமலர் எழுதி வந்திருந்தமை சிறப்பு‌ . பெண்ணியம் குறித்து தீவிரமான உரையாடல்கள் நடைபெற்றன. அண்மையில் விவாதப்  பொருளான ஒருபால் திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. நானும் நிகழ்வில் பங்கேற்றேன். நண்பர் விஷ்ணு குமரனும் சில கருத்துக்களை தீவிரமாக முன் வைத்தார்.பனிமலர் மேலும் மேலும் சிறந்த நூல்களை அறிமுகப்படுத்துவார் என்று உறுதியாக நம்புகிறேன். மகள் மீது அளவுகடந்த அன்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் பனிமலரின் அப்பாவுக்கு என் அன்பு. பனிமலர் வாழ்க.!