என்னுடைய வாசிப்பு முறைகள்
நாம் எப்படி வாசிக்கிறோம்? என்பது குறித்து யோசித்திருக்கிறோமா, நான் பெரிதாக யோசித்திருக்கவில்லை. ஒரு கட்டுரையில் புனைவை கற்பனையால் விரிக்க வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் சொல்ல எனக்குள் ஒரு வெளிச்சம். அதன் பிறகு புனைவை வாசிக்கும் போது கற்பனை செய்யப் பழகினேன். உதாரணமாக, நதியில் படகு மெல்ல அசைந்து சென்று கொண்டிருக்கிறது. படகின் அமர முனையில் ஒருவன் நின்றிருக்கிறான். காற்று அவன் கூந்தலை மெல்ல அசைக்கிறது. இப்படிப்பட்ட வரிகள் வெண்முரசில் வரும்போது நான் அவற்றை கற்பனை செய்து கொள்வேன். கம்பனையும் இப்படித்தான் வாசிக்கிறேன். எல்லா நேரத்திலும் அல்ல, எல்லா கவிதைகளையும் இப்படியே வாசிக்கிறேன் என்று திட்டவட்டமாக சொல்லவும் முடியாது. சில கவிதைகளில் சந்த இனிமை, சொல்லாட்சி, அழகிய அணிகள் இவை சிறப்பாக இருக்கும். அப்போது நான் அவற்றில் இயன்றவரை கரைந்து போக விரும்புவேன். விரும்புவேன் அல்லது விரும்புகிறேன் என்று சொல்ல முடியுமே தவிர அவ்வாறு செய்ய எல்லா நேரத்திலும் முடிகிறது என்று சொல்ல முடிவதில்லை . போரும் அமைதியும் நாவலின்முதல் பகுதி மட்டும் வாசித்திருக்கிறேன். ஆ...