Posts

Showing posts from September, 2023

எனக்குப் பிடித்த மெட்ராஸ் பேப்பர்

. பல வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் பா ராகவன் எழுதிய டாலர் தேசம் என்ற புத்தகம் மிக மிகப் பரபரப்பாக பேசப்பட்டது‌  சென்னை புத்தகக் கண்காட்சியில் அதை  தூக்கி கையில் வைத்துக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் கீழே வைத்து விட்டேன்.  ஒரே காரணம் தான். பாட புத்தகங்களைப் படிக்கவே பலருடைய உதவியை நம்பி இருக்கும் எங்களுக்கெல்லாம், அவ்வளவு கனமான புத்தகத்தை யார் வாசித்துக் காட்டுவார்கள்?    டாலர் தேசம் புத்தகத்தை பெருந்தொற்று காலகட்டத்தில் கிண்டிலில் படித்தேன். தனியாக இருக்க நேர்ந்த நாட்களில் அவருடைய யதி நாவலைப் படித்தேன். பிறகு அவருடைய சில அரசியல் வரலாற்று நூல்கள். எல்லாவற்றைப் பற்றியும் எழுத வேண்டும்.  2022ம் ஆண்டில் மெட்ராஸ் பேப்பர் வெளிவரத் தொடங்கியது. 2023 ஜனவரி முதல் தேதி நான் செய்த முதல் காரியம் மெட்ராஸ் பேப்பருக்கு ஆண்டுச்சந்தா கட்டியதுதான்.  அதில் வரும் உலக அரசியல் பற்றிய கட்டுரைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சப்ராஸ் அகமது எழுதும் கட்டுரைகள் மூலம் இலங்கை அரசியலை தொடர்ந்து அறிந்து கொள்ள முடிந்தது. இப்போது அவர் மற்ற நாடுகளின் அரசியல் விவகாரங்களையும் கட்டுரையாக எழுதுகிறார். ஆனால் அமெரிக்க அரசியல் ப

அப்பாசாமி

அப்பப்ப பேசுவார் யூதச்சாமி  பூ பழம் மட்டும்தான் பிராமண சமி கிருஷ்ணா கோவிந்தா வைஷ்ணவ சாமி மந்திரம் கேட்காத திராவிடச் சாமி அம்மா போடுவாள் ஆமாம் சாமி அவளுக்கோ அப்பா சாமி என்னைக் கேட்டால் ஆள விடு சாமி (2010 க்கு முன்பு நான் எழுதியது)

அருகழைக்கிறது அது

இன்று ஒரு முக்கியமான நாள். தமிழ்ப் பேரிலக்கியமான கம்பராமாயணத்தின் 5 ஆயிரம்  பாடல்களை இன்றுடன் நிறைவு செய்யவிருக்கிறோம். மனம் மகிழ்ச்சியால் நிறைகிறது. பத்தாயிரம் பாடல்களை நிறைவு செய்யும் நாளும் நெருங்குகிறது, ஆம்!  அதோ அங்கேதான் இருக்கிறது, நம்மை அருகழைக்கிறது அது! 

முதல் கவிதை

பாரத நாடு பழம்பெரும் நாடு பண்புள்ள மாந்தர் வாழும் நாடு பண்பும் பரிவும் மிக்க நாடு பயங்கரவாதத்தை எதிர்க்கும் நாடு சாதி சமயம் கடந்த நாடு ஜனநாயகம் ஓங்கிய நாடு வாழ்க நாடு நம் நாடு வெற்றி நடை போடும் பாரத நாடு இது ஏழாம் வகுப்பு படிக்கும் போது நான் எழுதிய கவிதை என்று நினைவு. இந்தக் கவிதை என்னால் எழுதப்பட்டதா இல்லை நான் படித்த பாட புத்தகத்தில் இருந்ததா என்று இப்போது சரியாக சொல்ல முடியவில்லை. நடுவில் ஒரு வரியை கூட இப்போது நினைவிலிருந்து எழுதியிருக்கிறேன். ஆனால் ஒரு நாள் அதிகாலை வேளையில் ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு நான் உட்கார்ந்திருந்ததும் அப்பா என்ன செய்கிறாய் என்று கேட்டதற்கு கவிதை எழுதுகிறேன் என்று சொன்னது மட்டும் இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.  ஆமாம், நிஜம்தான்.  ஒரு நாள் அதிகாலை கவிதை எழுத உட்கார்ந்திருக்கிறேன்!   அதை சொல்லத்தான் இந்த  கவிதையை நினைவு படுத்திக் கொண்டேன். 

நான் வாங்கிய முதல் குட்டு!

பெயர் பொருத்தம் பற்றி எல்லாம் எனக்கு பெரிதாகத் தெரியாது. ஆனால் சில நிகழ்ச்சிகளை பார்த்தால் ஏதாவது அப்படி இருக்குமோ என்று தான் தோன்றுகிறது.   பரமக்குடி ஆயிர வைசியத் தொடக்கப் பள்ளியில் என்னைச்  சேர்த்திருந்தார்கள்.முருகேசன் சார்  பள்ளியின் தலைமை ஆசிரியர். அவருடைய மனைவி கோமதி டீச்சர் எனது ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்.  என்னுடைய அம்மா எனக்கு வீட்டிலேயே  தமிழ் எழுத்துகளை எழுதச்  சொல்லிக் கொடுத்திருந்தார். ரிக்ஷாவில் பள்ளிக்குச் சென்று இறங்கியவுடன் நான் ஸ்லேட்டுப்  பலகையில் நேரடியாக அம்மா என்று எழுதிக் காட்டியதும் கோமதி டீச்சர் பரவாயில்லை என்று சொன்னதும் அப்படியே நினைவில் இன்னும் இருக்கிறது. என்னைப் பள்ளியில் சேர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டவர் நாங்கள் குடியிருந்த மேலச்சத்திரம் தெரு ஸ்டோர் வீட்டில் எங்களுடன் வசித்த திருமிகு  ராமசாமி அவர்கள். நாங்கள் அவரை வாத்தியார் மாமா என்று ஆசையாகக் கூப்பிடுவோம். செல்லம்மாள் டீச்சர் என்று இன்னொரு டீச்சரும் எங்கள் ஸ்டோர் வீட்டில் குடியிருந்தார். ஒரு பெரிய வீடு அதில் பல குடும்பங்கள் சில அறைகளை பங்கிட்டுக்கொண்டு வசிப்பார்கள். வீட்டுக்கு பொதுவாக ஒரே வாசல்தான். 

விரல் மொழியருக்கு வாழ்த்துக்கள்

லூயி பிரெய்ல் பார்வையற்றவர்கள் தொட்டு உணரும் புள்ளி எழுத்து வடிவங்களை உருவாக்கினார்.. அதனால்தான் அந்த எழுத்து வடிவங்கள் அவற்றை உருவாக்கிய லூயிப் ப்ரெய்ல்  பெயரிலேயே ப்ரெய்ல் எழுத்துக்கள் என்று இன்றளவும் குறிக்கப்படுகின்றன.  . 6 புள்ளிகளைக் கொண்டு 63 வேறுபட்ட வடிவங்களை உருவாக்க முடியும். அந்த வடிவங்களை இணைத்து எழுத்துகளாக பயன்படுத்த முடியும். உலகின் எந்த மொழியையும்  ப்ரெய்ல் வாயிலாக எழுத முடியும். ப்ரெய்ல் எழுத்துக்களை புள்ளி எழுத்துகள், குமிழி எழுத்துக்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு. எழுத்துகளை விரல்களால் தொட்டு உணர முடியும் என்பதால் பிரெய்ல் எழுத்துக்களை விரல் மொழி என்றும் கூடச் சொல்லலாம்.  . நண்பர்கள் சக்திவேல்,  பாலகணேஷ் விரல் மொழியர் என்ற இணைய இதழை வெகு நாட்களாக நடத்தி வருகிறார்கள்.  நவீன இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள். மனோகர் என்ற இன்னொரு நண்பரும் புத்தகப் புதையல், புத்தகப் பூங்கா என்ற வெவ்வேறு புலனக் குழுக்கள்  வாயிலாக பார்வையற்றவர்களிடையே வாசிப்புச்  செயல்பாட்டை ஊக்குவிக்கிறார். இப்போது இவர்கள்  மூன்று பேரும் சேர்ந்து ஒரு திட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.  ஆர்வமூடைய வாசகர்களிடமிருந்து 50

25

நான்கு மாதங்களுக்கு முன்பு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. கூப்பிட்டவர் என் தோழி. ஜெ.  சுடர்விழி. சென்னை கிறித்துவக் கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவரும் நானும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம்.  எதிர்பாராத பொழுதில் அவர் அழைத்திருந்தது ஓர் ஆச்சரியம் என்றால்,  அவர் சொன்ன ஒரு தகவல் இன்னொரு ஆச்சரியம், அல்லது அதிர்ச்சி.  நாங்கள் இளங்கலை முடித்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை  அவர்  சுட்டிக் காட்டினார். உடனே எம்சிசி தமிழ் 95- 98 என்ற பெயரில் ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டது. உடன் படித்தவர்கள் ஒவ்வொருவராக வந்து சேரத் தொடங்கினார்கள். அதன் பிறகு எம் சி சி 95 98 ரியூனியன் என்று இன்னொரு வாட்ஸ் அப் குழு வேறு.  செப்டம்பர் 9 சென்னை கிறித்துவக் கல்லூரியில் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கண்டிப்பாக வரத்தான்  வேண்டுமா  என்றிருந்தவனை மிரட்டி வரவழைத்து விட்டார்கள்.  நாங்கள் கேட்டுக்கொள்ள எங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களுள் சிலர் வருகை தர இசைந்தார்கள்.  82 வயதான பேராசிரியர் தி. இராஜகோபாலன் அவர்கள் நான் தாமதமாக சென்ற போது  முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். பேராசிரியர்

சொல்வனம் இதழுக்கு நன்றி

எஸ் திவாகர் கன்னடத்தில் எழுதிய சலா என்று சிறுகதை உறுதி என்ற பெயரில் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. , சிறுகதை ஜூன் 25 சொல்வனம் இதழில் வெளிவந்துள்ளது. ஜூன் 25 எனக்கு ஒரு முக்கியமான நாள். இரண்டாவது மகன் அபிநவ பாரதியின் பிறந்தநாள். எனவே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மேலும் ஒரு கூடுதல் செய்தி. சரஸ்வதி என்ற அம்மையார் அமெரிக்காவிலிருந்து அழைத்திருந்தார். அவர் சிறுகதையை ஒலிப்பதிவு செய்து வலையேற்றியிருந்தார்.  அமெரிக்காவில் தமிழ் பேசத் தெரிந்து வாசிக்கப் பொழுது கிடைக்காத நண்பர்களுக்காக இந்த பணியை முதுமையிலும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளத்தான் எத்தனை வழிகள். சரஸ்வதி அம்மையாருக்கு  வணக்கங்கள்.  நண்பர் சிவா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந்தப் பணியில் எனக்கு உதவினார். பேராசிரியர் சிவக்குமார் திராவிடப்  பல்கலைக்கழக துளுவியல் துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார். அவரும் இந்தப் பணியில் என்றுடன் நின்றார் இருவருக்கும் என் நன்றியும்,அன்பும்.  சொல்வனம் ஆசிரியக்குழுவுக்கு என் நன்றி. இணைய வாசிப்பு எனக்கு சாத்தியமான காலத்தில் அறிமுகமான இதழ் சொல்வனம்.  நான் நெடுநாள் வ

அகராதி பிடிப்பவன்

சந்தேகம் வரும்போது அகராதியைப் பார்க்கலாம் அகராதியை மொத்தமாக படிப்பவர்களை பார்த்ததுண்டா?  இந்தியக்கவிதையியல் தொடர்பான தேடலின் விளைவாக பேராசிரியர் மல்லேபுரம் வெங்கடேஷ்  தொகுத்த பாரதிய காவ்ய சாத்ர பரிபாஷே என்னும் அகராதி கிடைத்தது கர்நாடக சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் மல்லேபுரம் வெங்கடேஷ் இந்த அகராதியைத்  தொகுத்துள்ளார்.  ஹம்பி கன்னடப் பல்கலைக்கழகத்தில் முதலில்  பணியாற்றியவர்.   வடமொழியில் உள்ள கவிதையியல் சார்ந்த சொற்களை தொகுத்து விளக்கும் அகராதி இது.  ஒவ்வொரு கலைச் சொல்லையும் வரையறுத்து அதன் வரலாற்றை தொகுத்துரைத்து அது தொடர்பாக வாசிக்க வேண்டிய நூற்பகுதியையும் விளக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சான்றாக உன்மத்தம் என்ற ஓர் உணர்வு பற்றிப் பார்ப்போம்.  பரதர் தமது  நூலில் 33 மாறும் உணர்வுகளுள் ஒன்றாக  இதனைக் கருதுகிறார்.   மது அருந்துவதால் ஏற்படும் உணர்வு உன் மத்தம் எனப்படுகிறது. இந்த  மதமதப்பு தற்காலிகமானது. எனவே தான் இது சஞ்சாரி பாவம், அல்லது வ்யபாசாரி பாவம் என்று அழைக்கப்படும் மாறும் உணர்வுகளில் ஒன்றாக பரதரால் அடையாளப்படுத்தப்பட்