Posts

Showing posts from January, 2024

நீலி இதழுக்கு நன்றி

Image
கன்னட எழுத்தாளர் வைஷாலி ஹெகடே எழுதிய சிறுகதை  ஒந்து மத்தியானத மீட்டிங். இந்தச் சிறுகதையை. ஒரு நண்பகல் சந்திப்பு என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். சிறுகதை  பிப்ரவரி மாத நீலி இதழில் வெளி வந்திருக்கிறது. .  சிறுகதையை மொழிபெயர்க்க அனுமதித்த எழுத்தாளர் வைஷாலி ஹெகடே அவர்களுக்கும், நீலி இதழில் வெளியிட்ட எழுத்தாளர் ரம்யா அவர்களுக்கும்,  மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சந்தேகங்களைத் தீர்த்து வைத்த திராவிடப் பல்கலைக்கழகத்  துளுவியல்த்துறைத் தலைவர் பேராசிரியர் பி எஸ் சிவகுமார் அவர்களுக்கும் சிறுகதையை வாசிக்கவிருக்கும் உங்களுக்கும் நன்றி.  உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.  இணைப்பு கீழே  https://neeli.co.in/2677/ அறிமுகம் இதழ்கள் Home சிறுகதை ஒரு நண்பகல் சந்திப்பு – வைஷாலி ஹெகடே ஒரு நண்பகல் சந்திப்பு – வைஷாலி ஹெகடே February 1, 2024 – தமிழில்: கு. பத்மநாபன் வைஷாலி ஹெகடே (கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடக மாவட்டத்தில் அங்கோலா என்ற ஊரில் பிறந்தவர் வைஷாலி. பொறியியல் பட்டதாரி. அமெரிக்காவின் மெஸசூச்செட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் பணிபுரிகிறார். இலக்கியம்

மற்றும் ஒரு மைல்கல்!

இன்று 31 ஜனவரி 2024. கம்பராமாயண கூட்டு வாசிப்பின் 350ஆவது அமர்வு. உண்மையில் கலந்துகொள்வேன் என்று நினைத்திருக்கவில்லை.   எழுத்தாளர் பார்கவி அவர்கள்தான் நினைவுபடுத்தினார். நண்பர்கள் சிறப்பாக  வாசிப்பை நிகழ்த்தினார்கள்.  அடுத்தென்ன? 375.  அப்புறம்?  400!  ஏனென்றால் இது இம்பர் வாரி, வாரி என்பதற்கு முடிவேது!  அனைத்திற்கும் நன்றி நண்பர்களே! 

வாழ்த்துக்கள்

பேராசிரியர் சுப்பிரமணி இரமேஷ் முக்கியமான ஆய்வுகளை முன்னெடுக்கிறார். இலக்கியத் திறனாய்வு, ஆய்வு, தொகுப்பு என பல நிலைகளில் பங்களித்து வருகிறார்.  பேராசிரியர்  வீ. அரசு அவர்களின் மாணவர்.  அண்மையில் சுப்பிரமணி இரமேஷ் எழுதியுள்ள தமிழில் தலித்தியம் என்ற நூலுக்கு பேராசிரியர் க.  பஞ்சாங்கம் அவர்களின் பெயரில் வழங்கப்பெறும் பஞ்சு  பரிசில் 2023 வழங்கப்படுகிறது.  பேராசிரியர் க. பஞ்சாங்கம் அவர்களினைச் சிறப்பிக்கும் வண்ணம்  நடைபெறும் பஞ்சு  75  விழாவில் பரிசு வழங்கப்படுகிறது.  பிப்ரவரி  நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை  சென்னை ரோஜா முத்தையா நினைவு நூலக வளாகத்தில்  விழா நடைபெறுகிறது. நண்பர்  இன்னும் நிறைய நிறைய அங்கீகாரங்களைப் பெறவேண்டும்.  வாழ்த்துக்கள் இரமேஷ்! 

ஒரு பட்டியல் ஒரு பரிந்துரை

இன்று புதன்கிழமை ஜனவரி 24 2024 மெட்ராஸ் பேப்பர் இதழில் நான்கு குறுங்கதைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்தாளர்கள் பா ராகவன், என் சொக்கன், ந ஜெயரூப லிங்கம், சௌமியா ஆகியோரின் படைப்புகள். பேய் ,தெய்வம், ஆன்மீகம், புராணம் ஆகிய களங்களில் கதைகள்.  சௌமியாவின் கதை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. சுக்ரீவனுக்கு கிட்கிந்தை  அமைந்த உடன் தாரை அவனுடைய மனைவியாக அமைகிறாள். சுக்ரீவனின் மனைவியை வாலி அபகரித்தான் என்ற காரணத்தினால்,  இராமன் வாலியை மறைந்து நின்று கொல்ல முயல்வது ஏற்கனவே தாரைக்குத் தெரிந்து விட்டது. அவள் சுக்ரீவனின் மனைவியைக்  கேட்காமல்  அவள் அபகரிக்கப்பட்டாள் என்று இராமன் நினைப்பது முறையல்ல,  ஆண்கள் எல்லாம் சபலக்காரர்கள், பெண்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்று இராமனை எச்சரிக்கிறாள். இராமன் கேட்கவில்லை. இராவணனை வென்று இராமன் மீண்டும் கிக்கிந்தை திரும்புகிறான். அப்போது, சுக்ரீவனின் மனைவியாக மட்டுமல்ல பட்டத்தரசியாகவும் இருந்து இராமனுக்கு விருந்தில் உணவு பரிமாறும் தாரை ஆண்கள் எல்லாம் சபலக்காரர்கள், பெண்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் இதில் சீதையும் விதிவிலக்கல்ல என்று கூறுவது இராமனின் மனதில் சீதை மீதான சந்த

எல்லோர்க்கும் பெய்யும் மழை

பரபரப்பான ஒரு காலை நேரம். சென்னை அம்பத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் நான் சாலையைக் கடக்க முயன்று கொண்டிருக்கிறேன். அந்தக் கரம் என் கையைப் பிடித்துக் கொண்டது. நான் முதுகலை படித்துக் கொண்டிருக்கக்கூடும். என்னைப் பற்றிய அறிமுகத்துக்குப்  பிறகு என் கனவுகளைக்கேட்டார் விஸ்வநாதன் சார்.  நிறைய நிறைய படித்து முனைவர்ப் பட்டம்  பெறுவது என் கனவு என்று நான் அவரிடம் சொன்னேன். அன்று மாலையே என் வீட்டுக்கு அவர் வருவார் என்பதும், என் அம்மாவிடம் உங்கள் மகன் படிப்புக்கு இனிமேல் நான் பொறுப்பு என்று அவர் சொல்வார் என்பதும் எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.  அவர் மட்டுமல்ல, அவருடைய தம்பி நாராயணன் அவர்கள், நாராயணன் அவர்களின் துணைவியார் திருமதி சாந்தி அவர்கள், சாந்தி அவர்களின் அலுவலகத் தோழி பகுத்தறிவு அவர்கள் என என்னுடைய கல்வி வளர்ச்சியில் ஒரு குழுவே அவர் மூலமாக இணைந்து கொண்டது. .  ஆயிரக்கணக்கான பக்கங்களை நூற்றுக்கணக்கான ஒலி  நாடாக்களில் எனக்காக அவர் பதிவு செய்து கொடுத்திருக்கிறார். சுந்தர ராமசாமி எழுதிய ஜேஜே சில குறிப்புகள் வாசித்துவிட்டு  என்னிடம் விவாதித்தார். தாம்  பங்களாதேஷுக்கு அலுவலகப்  பணியாக சென்றப

எமது இல்லத்துக்கு வருக!

சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது முதன் முதலில் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச்  சென்ற நினைவு. ஒவ்வொரு வருடம் கண்காட்சியில் நான் வாங்கியிருக்கும் நூல்களின் அடிப்படையில் அப்போதைய என் மனநிலையை புரிந்து கொள்ள முடியும். முதன் முதலில் கண்காட்சிக்குச் சென்றபோது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட சிறு துண்டுப் பிரசுரங்கள்  மற்றும் குறுநூல்களை அதிகம் வாங்கினேன்.  சில புத்தகங்களின் பெயர்களைச்  சொல்கிறேன். வஞ்சக வலை விரிக்கும் தன்னார்வக்குழுக்கள் , மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தை எவ்வாறு பயில்வது?  இப்படிப்பட்டவை.  அடுத்த வருடமே சக்கரம் சுழன்றுவிட்டது. உங்களுக்குள் இருக்கும் காந்த சக்தியை பயன்படுத்துவது எப்படி? உபநிஷதங்களின் சாரம் முதலிய  புத்தகங்கள்  பக்கம் என் கவனம் சென்றது.  நண்பர்களுடன் சேர்ந்து செல்வது வழக்கம். வீட்டிலிருந்தே புளி சாதம் தயிர் சாதம் கட்டிக்கொண்டு சென்று, புல் வெளியில் உட்கார்ந்து மதியம் சாப்பிடுவோம்.  அப்போதெல்லாம் சில சுற்றுகளில் ஒட்டுமொத்த கண்காட்சியையே பார்த்து விட முடியும். எவ்வளவுதான் சுற்றி வந்தாலும்  கால

நட்சத்திரங்களில் நடப்பவர்கள்

பகல் உழைப்புக்கும் இரவு ஓய்வுக்கும் உரியவை என்று சொல்லப்படுவதுண்டு  ஆனால் தூக்கம் வராத பொழுதுகளில் ஜன்னல்களின் வழியே எட்டிப் பார்ப்பவர்களுக்கு இன்னொரு உலகம் திறந்து கொள்வதுண்டு. பைத்தியக்காரர்கள், குடிகாரர்கள், நோயாளிகள் மட்டுமல்ல மின்னும் நட்சத்திரங்கள், ரகசிய வாசனைகள் என்று இரவு தனக்குரிய மர்மங்களுடன் நமக்காகக் காத்திருக்கிறது.  ஜெயமோகனின் இரவு நாவலின் சில அத்தியாயங்களை அவருடைய இணையதளத்தில் வாசித்ததுண்டு. ஆனால் அண்மையில் வந்த ஒரு வாசகர் கடிதம் அந்த நாவலை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பியது.  சரவணன் என்ற ஆடிட்டர் கேரளத்தில் எர்ணாகுளம் அருகே ஓய்வுக்கு சென்றபோது இரவில் மட்டுமே வாழும் மனிதர்களை  தற்செயலாகச் சந்திக்கிறான். நீலிமாவை சரவணன் சந்திப்பதும் , இரவில் விழிப்பு பகலில் உறக்கம் என்று வாழக்கூடிய , அவளைத் திருமணம் செய்து கொள்வதும் கமலா என்ற பெண்ணின் கொலையும் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளும் நாவலில் விவரிக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன்பும் கதையின் மைய நீரோட்டத்திலிருந்து விலகியது போன்று காட்சியளிக்கும் சில வரிகள். ஆனால் அது கதையைப் புரிந்து கொள்ள உதவவும் செய்கிறது.

பெருங்கைத் தீண்டல்

கல்லூரி மாணவர்கள் குறிப்பாக தமிழ் படிப்பவர்கள் கூடுதலாக எவற்றை யுமே படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தீவிர இலக்கிய மேடைகளிலும், இதழ்களிலும்  அவ்வப்போது ஒலிப்பதுண்டு. . இந்தக் குற்றச்சாட்டில் ஓரளவு அடிப்படை  இருக்கிறது என்று ஒப்புக் கொண்டாலும் கூட எங்களைப் போன்றவர்கள் செய்யக்கூடியது என்ன என்பதே கேள்வி.  வகுப்பில் நல்ல நூல்களை அறிமுகப்படுத்தலாம், நூல்களை வாசிக்கும் பழக்கம் மாணவர்களிடம்  வளர எங்களால் இயன்றதைச் செய்யலாம். மாணவர்களை இலக்கிய விழாக்களுக்கு அழைத்துச் சென்று நூல்கள், எழுத்தாளர்கள் சார்ந்து ஆர்வத்தை ஏற்படுத்தலாம். மேலும் சிறிய அளவில் இதழ்களை நடத்தும் முயற்சியில் ஈடுபடலாம். விளைவாக எங்களுடன் இருக்கும் மாணவர்கள்  இலக்கியம்,  இதழியல் இரண்டிலும் அறிமுகமும் அனுபவமும் பெறுவார்கள்.  சென்னை அடையாறில் உள்ள தூய லூயி காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோர் பள்ளியின் மாணவனாக இருந்தபோது  வெளிச்சம் என்ற ப்ரெயில் இதழை நடத்தியிருக்கிறோம்.  சென்னைக் கிறித்துவக் கல்லூரி மாணவர்களாக இருந்தபோது நண்பர்கள் ஒன்றிணைந்து ஓடம் என்ற கையெழுத்து இதழை நடத்தியிருக்கிறோம் .  எழுத்தாளர் சரவணன் சந்திரன் அண்மையில் ஒரு

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு

நாளை ஞாயிற்றுக்கிழமை, சென்னை புத்தகக் கண்காட்சியில் நண்பர் பொருளை க மாரியப்பன் மொழிபெயர்த்துள்ள அத்தங்கி மலை சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறயிருக்கிறது.  நண்பருடன் சென்னை வருகிறேன். .  நாளை ஜனவரி 7 . 12 மணி அளவில் புத்தக வெளியீடு நடைபெறுகிறது.  எழுத்தாளர் அஜயன் பாலா வெளியிடுகிறார். நிகழ்ச்சியில் தெலுங்கு எழுத்தாளர் பி அஜய் பிரசாத் அவர்களும் பங்கேற்கிறார். நிகழ்ச்சி எதிர் வெளியீடு அரங்கு F 61 ல் நடைபெறும்   நண்பருடன் நானும் வருகிறேன். நீங்களும் வருவீர்கள் தானே!