ஒரு பட்டியல் ஒரு பரிந்துரை

இன்று புதன்கிழமை ஜனவரி 24 2024 மெட்ராஸ் பேப்பர் இதழில் நான்கு குறுங்கதைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்தாளர்கள் பா ராகவன், என் சொக்கன், ந ஜெயரூப லிங்கம், சௌமியா ஆகியோரின் படைப்புகள். பேய் ,தெய்வம், ஆன்மீகம், புராணம் ஆகிய களங்களில் கதைகள். 
சௌமியாவின் கதை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. சுக்ரீவனுக்கு கிட்கிந்தை  அமைந்த உடன் தாரை அவனுடைய மனைவியாக அமைகிறாள். சுக்ரீவனின் மனைவியை வாலி அபகரித்தான் என்ற காரணத்தினால்,  இராமன் வாலியை மறைந்து நின்று கொல்ல முயல்வது ஏற்கனவே தாரைக்குத் தெரிந்து விட்டது. அவள் சுக்ரீவனின் மனைவியைக்  கேட்காமல்  அவள் அபகரிக்கப்பட்டாள் என்று இராமன் நினைப்பது முறையல்ல,  ஆண்கள் எல்லாம் சபலக்காரர்கள், பெண்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்று இராமனை எச்சரிக்கிறாள். இராமன் கேட்கவில்லை. இராவணனை வென்று இராமன் மீண்டும் கிக்கிந்தை திரும்புகிறான். அப்போது, சுக்ரீவனின் மனைவியாக மட்டுமல்ல பட்டத்தரசியாகவும் இருந்து இராமனுக்கு விருந்தில் உணவு பரிமாறும் தாரை ஆண்கள் எல்லாம் சபலக்காரர்கள், பெண்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் இதில் சீதையும் விதிவிலக்கல்ல என்று கூறுவது இராமனின் மனதில் சீதை மீதான சந்தேகத்தை ஏற்படுத்திவிடுகிறது  . 
.தன் கணவனை இராமன் வஞ்சகமாக கொன்று விட்டான் என்பதற்காக இராமன் மனைவியை தாரை பழிவாங்கி விடுகிறாள். இவ்வாறு எழுதப்பட்ட கதை. சௌமியா சிறந்த புனைவுகளை எழுதுவார் என்ற  நம்பிக்கை இந்தச் சிறுகதையிலேயே தெரிகிறது.  அடுத்து சிறப்பாக வந்திருப்பது என் சொக்கனின் கதை. பா ரா வின் கதைக்கு இணையாக,(அதைவிடவும் சிறப்பாக)   வந்திருக்கிறது என்று தான்  சொல்வேன். ,
 என் பட்டியல் இது. . 
சௌமியாவின் கதையை வரிசையில் இடம் பெற்றிருக்கும் கதைகளில்  நான் முதலில் வைப்பேன். அடுத்து சொக்கன் எழுதியுள்ள சிறுகதை. அப்புறம் தான் மற்ற கதைகள். ஆசிரியர் பா ரா வை. அவருடைய மாணவர்கள் வென்று விட்டார்கள். 
 படித்துப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்