சங்கல்பம் என்னும் தெய்வம்

குருஜி சௌந்தர் அவர்கள் தம்முடைய ஙப்போல்  வளை நூலில் சங்கல்பம் என்பதன் மகத்துவம் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள். அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இணையத்திலேயே வேறு சில கட்டுரைகளும் கிடைக்கின்றன. உதாரணமாக குரு சத்யானந்த சரஸ்வதி அவர்கள் பிரான்ஸ் தேசத்தில் ஆற்றிய உரை கட்டுரை வடிவில் yoga journal என்ற  இணையதளத்தில் இருக்கிறது. இந்த சங்கல்பம் என்பதை வாழ்வில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஒரு பயிற்சியை யோக மரபு வடிவமைத்துள்ளது. பத்து நிமிடம் மட்டுமே நீளக்குடிய இந்த பயிற்சிக்கு சங்கல்ப யோகநித்ரா என்று பெயர். இணையத்தில் உடனே தேடி ஏதோ ஒரு வீடியோவை கண்டுபிடித்து எடுத்து கவனித்து பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டாம். குருஜி சௌந்தர் போன்ற நல்லாசிரியர்களின் திருவடிகளை வணங்கி முறைப்படி கற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சியில் நான் இருக்கிறேன். என் அளவில் எனக்கு சில அனுபவங்கள் கிடைத்துள்ளன. என் மீது நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் இனிவரும் பகுதிகளை படித்தால் போதும். 
 நேற்று ஓர் உரையை சிறப்பாக வழங்க வேண்டும் என்று சங்கல்பம் செய்திருந்தேன். நேற்று நாள் முழுக்க பெரும் கொந்தளிப்பு. திட்டமிட்டது எதுவும் முறைப்படி நிகழவில்லை. என்னுடைய அன்றாட யோக பயிற்சியை கூட நேற்று என்னால் முறைப்படி செய்ய முடியவில்லை. இத்தனைக்கும் எதிர்பாராத தடைகளை சமாளிக்க வேண்டும் என்பதற்காக வழக்கத்தை விட முன்னரே பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டேன். அப்படியும் பயிற்சி எதிர்பார்த்தபடி  அமையவில்லை.  எப்படியோ மாலை வேளையில் நேரம் கண்டுபிடித்து விடுபட்ட பயிற்சிகளை நிறைவு செய்தேன் என்பது தனிக்கதை. ஆனால் இத்தனை குழப்பங்களுக்கும் இடையில் அந்த உரை மட்டும் அவ்வளவு அழகாக வந்திருந்தது.  இதுதான் சங்கல்பம். 
நண்பர்களே யோகம் பயில்க! 

Comments

Popular posts from this blog

அந்தக் கரம் அந்த மனம்

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்