484 ாழ்த்துக்கள் பத்மநாபன்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என்பதில் எனக்கு விருப்பம் அதிகம். ஒரு நாட்குறிப்பில் வேலைகளை எழுதி வைத்து அவற்றை செய்து முடித்தவுடன் டிக் செய்து கொள்வது, ஒவ்வொரு வாரமும் மொத்தமாக கணக்கிட்டு செய்து முடித்த வேலைகளுக்கு ஏற்ப எனக்கு நானே மதிப்பெண் வழங்கிக் கொள்வது எல்லாம் நினைவிருக்கிறது. அக்கா அதனை எடுத்து எனக்கு நானே போட்டுக் கொள்ளும் மதிப்பெண்களுக்காக என்னை கேலி செய்ததுண்டு. அக்கா அல்ல இன்னொரு அம்மா என்று அவளை நான் உணரத் தொடங்கி இருந்தபோது நான் சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்தேன். எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்வதில் விருப்பம் கொண்ட எனக்கு எழுதுவது மட்டும் கை கூடவே இல்லை. ஒரு மகனாக, அப்பாவாக, ஆசிரியராக மகிழ்வு கொள்ளும் என்னால் என்னுடைய எழுத்துப் பங்களிப்புகள் பற்றி மட்டும் சொல்லிக் கொள்வதில் தயக்கமும் பதற்றமும் உண்டு. 2023 ஜனவரியின் தொடக்க நாட்கள் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்கள் முன்னெடுக்க ஆயிரம் மணி நேர வாசிப்பு பணியில் நண்பர்கள் ஈடுபடத்தொடங்கினார்கள். கதிரவன் என்னை அழைத்து வாசிப்பு சவாலில் பங்கெடுத்துக் கொள்ள கேட்டுக் கொண்ட...