வருந்துகிறேன்

இரண்டு நாட்கள் கொட்டி தீர்த்த பெருமழையில் எவ்வளவோ சேதங்கள், தண்ணீர் புகுந்து விட்ட வீடுகள். எங்கள் வீடும் தண்ணீரில் மிதக்கிறது. 
எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் பதிப்பகக் கிடங்கில் தண்ணீர் புகுந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் சேதமடைந்து விட்டதாக எழுதியிருக்கிறார். 
ஒரு புத்தக தயாரிப்பு என்பது வெறும் அச்சடிக்கப்பட்ட தாள்களை அட்டை போட்டு ஒட்டுவது மட்டுமல்ல. ஆய்வு, எழுத்தாக்கம், எழுத்தை பண்படுத்துதல், அச்சாக்கம், விற்பனை,வாசக மருவினை என ஒரு புத்தகம் மேற்கொள்ள வேண்டிய பயணம் மிக அதிகம். 
எஸ். ரா எழுதியிருக்கிறார். மற்ற சிறிய பதிப்பாளர்கள் என்னென்ன சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களோ? 
இன்னும் ஒரு மாதத்தில் சென்னை புத்தகக் கண்காட்சி. நெருக்கடியான நாட்கள் தான். 
அவருடைய எழுத்துக்களை தொடர்ந்து படிப்பவன் என்ற வகையில்  ஆத்மார்த்தமாக எஸ். ராவுடன் இருக்கிறேன். 
மீட்டு விடலாம் எஸ் ரா

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்