தனிச்சொல் நிகழ்ச்சியில் பங்கேற்றேன்

தனிச்சொல் அமைப்பின் சார்பில்  நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிகளின் எழுத்தும் வாழ்வும் என்ற பொருளில் உரையாற்றினேன். பேராசிரியர் முருகானந்தம் மாற்றுத்திறனாளிகளின் கல்வி வாய்ப்புகள் குறித்தும் இன்றைய கல்விக் கொள்கையின் சாதக பாதகங்கள் குறித்தும் பேசினார். நண்பர் சரவண மணிகண்டன் இன்றைய ஊடகங்கள் மாற்றுத்திறனாளிகள் குறித்து குறிப்பாக பார்வையற்றவர்கள் பற்றி எப்படிப்பட்ட அறியாமையுடன் செய்திகளை வெளியிடுகின்றன என்பதில் நம் கவனத்தை கோறினார். எழுத்து சார்ந்த அச்சத்தை எழுதுவதில் உள்ள தயக்கத்தை எழுத்து என்றவுடன் தொற்றிக் கொள்ளும் பதற்றத்தை எவ்வாறு பயிற்சியால் சிறிது சிறிதாக கடந்து வந்து கொண்டிருக்கிறேன் என்பது பற்றி என் சொந்த அனுபவங்களை முன்வைத்துப் பேசினேன்.
 
மூத்த பேராசிரியர் சுகுமாரன் அவர்கள் பங்கேற்றது மிகவும் நிறைவைத் தந்தது. அவர் late( எல்லாமே தாமதமாக நடப்பது அல்லது அமைவது), low productivity (குறைவான உற்பத்தித்திறன்),, high cost of living (வாழ்வுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்குக் கூட கொடுக்கப்பட வேண்டிய மிகையான விலை) ஆகிய மூன்று சிக்கல்கள் ஒருவர் பார்வையற்றவர் என்பதாலேயே எப்படி பாதிக்கின்றன? என்பதை சிறப்பாக விளக்கினார். அவர் சொன்ன மூன்றும் என்னை மட்டுமல்ல, என் மனைவியையும் பாதித்திருக்கின்றன. 
பேராசிரியர்  சிவராமன் விடுபட்ட இடங்களை நிறைத்தார். மாணவர் தினேஷ் பங்கேற்று உரையாடலை முன்னெடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் பல நண்பர்கள்  நிகழ்வில் இணைந்திருந்தார்கள். எல்லோருக்கும் நன்றி.  
ஜவகர் அவர்களுக்கு நன்றி சொல்வது சம்பிரதாயத்துக்காக அல்ல. 
முனைவர் க. ஜவகர் அவர்களை 10 ஆண்டுகளுக்கு மேலாக நன்கறிவேன். 
ஐயா கோவை ஞானி அவர்கள் ஜவகர் வடிவிலும் அவருடைய நண்பர்கள்  வாயிலாகவும் தொடர்ந்து நிலைத்திருப்பார். 
இந்த இனிய தருணத்தில் ஜவகருடன் சென்று கோவை ஞானி அவர்களை சந்தித்த உன்னதமான நிமிடங்களை நினைவுறுகிறேன். என் கையைப் பிடித்துக் கொண்டே அவர் பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் எழுகின்றன. 
தொடர்ந்து தகுதிப்படுத்திக் கொள்வதன் வாயிலாக ஐயாவுக்கு என் வணக்கத்தைச் செலுத்துகிறேன். 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்