இருளை மீட்டும் ரகசிய விரல்கள்

காலனிய காலகட்டத்தில் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பாக எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் தம் இணையதளத்தில் குற்ற முகங்கள் என்ற பெயரில் ஒரு தொடர் எழுதி வருகிறார். இதுவரை மூன்று அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை, மசூலிப்பட்டினம் முதலிய இடங்களில் நடைபெற்ற குற்றங்கள், அவற்றை செய்தவர்களின் வேறுபட்ட பின்னணிகள் இவற்றை மிக சுவாரசியமான மொழியில் விளக்குகிறார். ஏதோ ஒன்றை உலகத்திற்கு திரும்பத் திரும்ப நிரூபிக்கவே அவர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். உயரம் குறைந்த ஒருவன் பட்டப் பகலில் ஒரு கொலை செய்கிறான். பிறகு அந்தக் குற்றத்தின் பரவசத்துக்காகவே மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான். ப்ளேக் நோய் பரவிய கப்பலில் துணிந்து கொள்ளையடித்து விட்டு கப்பலுக்கு தீயிட்டு விடுகிறான் இன்னொருவன். 
வாழும்போதே இவர்கள் தொன்மங்களாக மாறிவிடுகிறார்கள். இவர்களைப் பற்றிய புராணங்கள். ஒரு வகையில் நமக்குள் இருக்கும் ஓர் இருண்ட பகுதியை இவர்கள் ரகசிய விரல்களால் தீண்டி விடுகிறார்கள். மின்மினிப் பூச்சிகளாக இருட்டை ஒளி கொள்ளச் செய்கிறார்கள் இவர்கள். 
 சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம். நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். 

Comments

Popular posts from this blog

நண்பர் சக்திவேலுக்கு வாழ்த்துகள்

அப்படி என்ன அவசரம் மாரிமுத்து அண்ணா?

தலையாலே தான் தருதலால்