இங்கிருந்து அங்கு பார்க்க இரண்டு சாளரங்கள்
தாம் வீட்டிலிருந்து வெளியேறி ஒரு நாடோடி போல் இந்தியா முழுவதும் அலைந்து திரிந்த அனுபவங்களை எழுத்தாளர் ஜெயமோகன் புறப்பாடு என்ற பெயரில் எழுதியிருக்கிறார். வீட்டில் கோபித்துக் கொண்டு நாகர்கோயிலில் இருந்த மாணவர் விடுதியில் தங்கியிருக்கிறார். கட்டடத் தொழிலாளியாக வேலை செய்கிறார். தாம் ஓர் அருட்தந்தையாக வேண்டும் என்று நினைக்கும் அருள், எளிய சுமை தூக்கும் பணிகளை மேற்கொள்ளும் நாகமணி போன்ற பல்வேறு நண்பர்கள் வேறுபட்ட குண இயல்புகளுடன் அந்த விடுதியில் இருக்கிறார்கள். ஜான் எப்போதும் ஜெபித்துக் கொண்டே இருக்கிறான். ஆங்கிலம் பேசத் தெரியாமல் கல்லூரியில் மாரிமுத்து தவிக்கிறான். ஒரு அடிதடித் தகராறில் நாகமணிக்காக உதவச் செல்லும் ஜெயமோகனையும் ஆபத்து சூழ்ந்துகொள்கிறது. கடைசியாக அவருடைய அண்ணன் வந்து ஜெயமோகனை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். இவ்வாறு முதல் பகுதி நிறைவடைகிறது உயிர் நண்பன் ராதாகிருஷ்ணன் பற்றிய விவரிப்புகள் புறப்பாடு நூலில் மிக விரிவாக இடம் பெற்றுள்ளன. ராணுவத்தில் சேர முடியவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்து கொள்ளும் ராதாகிருஷ்ணனின் இறப்பு ஜெயமோகனை அதிகம் பாதித்து வ...