என்னுடைய உரை
சுந்தரகாண்டத்தின் பிணிவீட்டுப் படலம் குறித்த என்னுடைய உரை மார்ச் 22 அன்று கிளப் ஹவுஸ் செயலி வாயிலாக நடைபெற்றது. பிணிவீட்டுப் படலத்தை தொகுத்துரைக்க அதில் இடம்பெற்றுள்ள பல வகை நாடகியத் தருணங்களை அறிய முடிந்தது. பிணிவீட்டுப் படலம் என்பதற்கு அரக்கர்கள் அரக்கத் தன்மை என்ற பிணியிலிருந்து நிரந்தரமாக விடுபடுவதற்குக் காரணமான படலம், அரக்கர்கள் அரக்கத் தன்மையிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுபடக் காரணமாக அமையும் படலம், இலங்கையின் கட்டுக்கோப்பு என்ற பிணிப்பு அனுமனால் நிரந்தரமாகக் கலைக்கப்படும் படலம் என்ற வெவ்வேறு விளக்கங்களை நண்பர்களுடனான தொடர் கலந்துரையாடலின் வழி அடைய முடிந்தது. அனுமன் இராவணனுக்குக் கூறிய அறிவுரைகளை காப்பியத்தில் இடம் பெற்றுள்ள வெவ்வேறு அறிவுரைப் பகுதிகளுடன் ஒப்பிட்டு விவாதிக்க முடிந்தது. ஒருவருக்கு நாம் அறிவுரை கூறும் போது இருவருக்கும் இடையில் திகழும் உறவு நிலைக்கேற்ப அந்த அறிவுரைகளில் சொற்கள் அமையும். அந்த வகையில் மாறிசன் அறிவுரையில் இரத்த உறவின் விளைவால் தோன்றும் நெருக்கமும், அனுமன் அறிவுரையில் சற்று கூடுதல் விலக்கமும், சடாயு உரையில் இராமன் மற்றும் இராவணன் இருவருக்கும்