இது ஒரு பழைய செய்தி. மிகப் பழைய செய்தி. அப்போதே நான் எழுதியிருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் எழுத முடிந்தது. இப்போதாவது எழுத முடிந்ததே என்று நிறைவடைய வேண்டியதுதான்! விரல் மொழியர் என்னும் பெயரில் பார்வையற்றவர்களின் வாசிப்புக் குழு ஒன்று புலனத்தில் செயல்பட்டு வருகிறது. நண்பர்கள் பொன் சக்திவேல், மனோகரன், பாலகணேசன் போன்ற பார்வையற்ற நண்பர்கள் அதன் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டு பார்வையற்றவர்களிடம் வாசிப்புப் பழக்கம் மேம்பட பணியாற்றி வருகிறார்கள். . அச்சு நூல்களைப் பார்வையற்றவர்கள் வாசிக்கும் வண்ணம் மின் நூல்களாக மாற்றும் ஒரு பெரிய பணியை நண்பர் சக்திவேல் முன்னெடுக்கிறார்.. நூல்களின் அட்டைகளை கழற்றி விட்டு அவற்றை ஸ்கேன் செய்யும் பணியை அவர் சளைக்காமல் முன்னெடுக்கிறார். ஒரு நூலை இவ்வாறு செய்யலாம். சில நூல்களையும் செய்து விடலாம். நூற்றுக்கணக்கான நூல்களை பொறுமையாக ஸ்கேன் செய்ய குறையாத ஈடுபாடு வேண்டும். நண்பர் சக்திவேலுக்கு அது நிறைய நிறைய இருக்கிறது. இதற்காக அவர் செலவிடும் நேரமும் உழைப்பும் மகத்தானவை. நானும் விரல் மொழியர் வாசிப்புக் குழுவில் இருக்கிறேன்....
இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மோகன் கூப்பிட்டு அதைக் கூறியபோது அதிர்ச்சி, எரிச்சல், துக்கம் ,ஏமாற்றம் எல்லாமும் ஆக இருந்தது. திங்கட்கிழமை காலை அவர் விளையாட்டாக என்னுடன் தெலுங்கில் பேசிக் கொண்டிருந்தார். இது உண்மை என்றால் வியாழக்கிழமை அவர் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் இதை ஏற்றுக் கொள்ளத்தான் விருப்பமில்லை. நம் விருப்பமெல்லாம் அதற்கு ஒரு பொருட்டே இல்லை என்பது வேறு கதை. செய்யாறு கல்லூரியில் அவர் வரலாற்றுத் துறையில் பணியாற்றும் காலத்திலிருந்தேஅறிமுகம் உண்டு என்றாலும், அப்பா இல்லாமல் அழுத என் அன்புத் தங்கை உமாவுக்கு (பேராசிரர் அ மோகன் அவர்களின் மனைவி) அவர் பொங்கல் சீர் கொண்டு வந்து கொடுத்ததை அறிந்த போது தான் அவர் மீது எனக்கு இன்னும் அன்பும் மதிப்பும் அதிகரித்தது. சம்பிரதாயத்துக்காக ஒரு முறை மட்டும் அது கொடுக்கப்படவில்லை. அண்ணனுடைய சீர் உமாவை வந்து சேர்வது வருடம் தோறும் நிகழும் ஒரு வழக்கமாக இருந்தது. . நண்பர் ஒருவரின் முனைவர்ப் பட்டம் தொடர்பாக அடிக்கடி பேசிக்கொள்ள அமைந்தது. இயல்பாகவே சிலருடன் மனம் ஒட்டிக்கொண்டு விடுகிறது. எனக்கு அப்படி ஒரு அந்தரங்கமான நெ...
குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல்களைப் படித்திருக்கிறேன், பாடம் நடத்தியிருக்கிறேன். அண்மையில் வாசித்தத் தமிழ் விக்கி பதிவு ஒன்றில் என்னை விட்டால் உனக்கு எத்தனையோ பேர் மாப்பிள்ளைமார், உன்னை விட்டால் எனக்கு பெண் உண்டோ மனோன்மணியே! என்று எழுதியிருப்பதாக நினைவு. அந்த நிமிடத்தில் இவரை பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. குணங்குடியார் சென்னையில் தான்அதிக காலம் வாழ்ந்திருக்கிறார். சென்னையில் 14 ஆண்டுகள் அவர் தியானத்தில் இருந்தார் என்பது ஐதீகம் தொண்டியிலிருந்து வந்து தங்கிய இடம் தொண்டியார் பேட்டை என்று தொடக்கத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் அது தண்டயார் பேட்டை என்று மாற்றமடைந்ததாக அறிகிறேன். அப்படி என்றால் குணங்குடியாரின் தர்கா தண்டையார்பேட்டையில் தான் இருக்க வேண்டும் என்று நினைத்துத் தேடியபோது அது பழைய வண்ணாரப்பேட்டையில் இருப்பதாக கூகுள் வரைபடம் காட்டியது. நேற்று ஜனவரி 13 திங்கட்கிழமை மாலையில் புறப்பட்டோம். அம்பத்தூரிலிருந்து வழக்கமான பாதையில் செல்ல முடியவில்லை. காரணம் மெட்ரோ பணி. அம்பத்தூரில் இருந்து மது...
ஆயிரம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழி வாழி
ReplyDeleteநன்றி பேராசிரியர் கதிரவன். பிழை களைகிறேன்.
ReplyDelete