Posts

Showing posts from February, 2024

நானும் ஒரு சார்பு நூல் ஆசிரியன்

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்கள் சிங்கப்பூரில் வழங்கிய உரைகளை எழுத்தாளர் பரிமித்தா தொடர்ந்து  அவருடைய வலைப்பக்கத்தில் ஆவணப்படுத்தி வருகிறார்.  https://parimitaa.blogspot.com/2024/02/6.html சுனில் அவர்களின் கருத்துக்களை தொகுத்து சூரிய மண்டலத்திற்கும் நவீன தமிழ் இலக்கியச் சூழலுக்கும்  உள்ள ஒப்புமைகளை விளக்கி அண்மையில் பரிமித்தா எழுதியிருந்தார். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கோணத்தில் தமிழ் மரபிலக்கியத்தையும் விளக்க முடியுமா என்று கேள்வி எழுந்தது. எனக்குத் தோன்றிய சில விஷயங்களை இன்று மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.  இதற்காக நான் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்களுக்கும் பரிமித்தாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.  வினையின் நீங்கிய விளங்கிய அறிவின் முனைவன் கண்டதே முதல் நூல் என்று தமிழ் மரபு சொல்கிறது.  தூய அறிவின் விளைவால் குற்றமின்றி பிறப்பதே முதல் நூல். அந்த முதல் நூலை விளக்கவும் விரித்தெடுக்கவும் மற்ற நூல்கள் முயலலாம். அவ்வாறு முயலும் நூல்களுக்கு வழிநூல் என்று பெயர். வழி நூலை விளக்கும் வண்ணமும் நூல்கள் பிறக்கலாம். அப்படிப்பட்ட நூல்களுக்கு சார்பு...

சாத்தானே அப்பாலே போ!

எதையாவது தேட வேண்டும் என்ற நிலையில் கூகுள் குரோம் என்ற பிரவுசரை திறந்து அதில் செய்திகளை உள்ளிட்டு தேடும் வழக்கத்தை பின்பற்றிவந்தேன். நம்முடைய அலைபேசியின் முகப்புத் திரையை இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் நோக்கி  விரல்களால் தள்ள இணையம் திறந்து கொள்ளும் என்பது எனக்கு ரொம்ப நாட்களாகத் தெரியாமல் இருந்தது. நான்  வாசிப்பிற்கு அலைபேசியில் உள்ள மின்னணு செயலிகள் மற்றும் இணையத்தையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருப்பதால் என்னுடைய நேரத்தைக் காப்பாற்றிக்கொள்ள அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது.  எனக்குக் கொஞ்சம் கிரிக்கெட் பைத்தியம் உண்டு. இணையத்தில் வரும்  விளையாட்டு தொடர்பான செய்திகளை வாசிப்பது மற்ற எதிர்மறை உணர்வுகளிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் என்பதும்கூட கிரிக்கெட் செய்திகளை நான் அதிகம் வாசிக்கக் காரணம்.  ஆனால் இப்போது அதில் தான் பிரச்சனை.  கிரிக்கெட் செய்திகள் என்ற பெயரில் வெற்று வதந்திகள், எதிர்மறை கருத்துக்கள். இப்போது என் அலைபேசி முகப்புத்திரை ஒரு மின்னணு குப்பைத் தொட்டி என்பதாக இருக்கிறது. எனக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் சிறிதும் எதிர்பா...

தலையாலே தான் தருதலால்

இன்று பல்கலைக்கழகத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் பக்கத்திலிருக்க ஒரு தென்னங்கன்றை நட்டு வைக்கும் நல்வாய்ப்பு அமைந்தது. வாழ்வில் முதல் முறையாக ஒரு தென்னம்பிள்ளையை கையில் ஏந்தினேன். மாணவர் பாரதிராஜா ஈரோடிலிருந்து கொண்டு வந்தது. பல்கலைக்கழகத்திற்கு ஒரு பரிசை வழங்கி விட்டு செல்ல வேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. மிகவும் நிறைவான நிமிடங்கள்.  பாரதிராஜா நம்முடைய பல்கலைக்கழகத்தில் முதுகலை பயில்கிறார், பல்கலைக்கழக புதிய சூழல் பிடிக்கவில்லை என்று சொல்லி சேர்ந்த சில நாட்களிலேயே திரும்பிச் சென்று விட்டார். அவர் திரும்பி வந்துவிட்டதில் எனக்கு மிகவும் சந்தோஷம். ஏனென்றால் சில மாணவர்களின் உடன் இருப்பே போதும்!  பாரதி அதிகம் பேச மாட்டார். ஆனால் நன்றாக ஓவியம் வரைவார். பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் நடைபெறும் வாராந்திர கருத்தரங்கில் ஒரு முறை தன்னுடைய  ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தார்.   கல்வி முடித்துச் செல்லும்போது ஒரு நினைவை பல்கலைக்கழகத்தில் விட்டுச் செல்ல வேண்டும் என்று பாரதிராஜாவுக்குத்  தோன்றியிருக்கிறது.  மூன்றாம் வகுப்பில் இந்த வெண்பா பாடம...