Posts

Showing posts from November, 2025

ஓர் உரை ஒரு கட்டுரை

நம்முடைய துறையில் தொடர்ந்து நடைபெற்று வரும் புதன் வட்ட நிகழ்வில் இன்று 20 நவம்பர் 2025 அன்று யு. ஆர். அனந்த மூர்த்தியின் 'திவ்யா' நவீனத்துவத்திற்கும் அப்பால் என்னும் பொருளில் இன்று உரையாற்றினேன். பொதுவாக புதன்கிழமை தோறும் நடைபெறுவதால் நிகழ்வின் பெயர் புதன் வட்டம்.  முழு கட்டுரையும் கையில் இருந்தது.‌ தொடர்ந்து மாணவர்கள் சிறப்பான விவாதத்தை முன்னெடுத்தார்கள். அனந்த மூர்த்தி, சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன் குறித்தெல்லாம் விவாதம் நிகழ்ந்தது.  மிகவும் நிறைவான இனிமையான நாள் இது! 

ஒரு நாடகம் மறுபடியும் நிகழ்கிறது

2006 அல்லது 2007 ஆக இருக்கலாம்  குப்பத்தில்  ஒரு முடி திருத்தும் கடைக்குச்  சென்றிருந்தேன். குப்பம் போன்ற சிறிய ஊர்களில் ஒருவருக்கு உபயோகித்த பிளேடையே  இன்னொருவருக்கும் உபயோகிப்பதாக ஒரு புகார்  பொதுவாக சொல்லப்படுவதுண்டு.  கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடையில் இருந்தார். அவர்தான் எனக்கு வேண்டியதைச் செய்தார்.   அவருக்கு ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சல் வந்திருந்த ஞாபகத்தில் விசாரித்தேன். அவரும் எனக்குப் பிடித்த கன்னட பாடலை ஞாபகம் வைத்திருந்து ஸ்பீக்கரில் ஒலிக்க வைத்தார். நாங்கள் நண்பர்களாகவே இருந்தோம். 10 நிமிடங்கள் கழிவதற்குள் நான் வாங்கி வந்தும் பிரிக்கப்படாத பிளேடை சுட்டிக்காட்டி நான் பதற்றத்துடன் கேட்டபோது அவர் புதிதாக அடுக்கப்பட்டு இருந்த பிளேடு பொட்டலத்தை எடுத்து என் கைமீது அழுத்தினார். அவர் வேகமாக அழுத்தினார் என்று சொல்லவும் வேண்டுமா என்ன! அப்போது பத்மநாபனும் கிருஷ்ணமூர்த்தியும் அங்கில்லை.  2025 நவம்பர்  14.    பார்வையற்ற நிலையில் தன்னந்தனியே சாலையில் நடந்து செல்லும் என்னையும் ஜோதியையும் பார்க்கப் பெருமையாய் இருக்கிறது என்ற...

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்

எஸ் எல் பைரப்பாவின் சுயசரிதை புகழ்பெற்ற ஒன்று.  ‌ காலச்சுவடு இதழில் எஸ் எல் பைரப்பா அவர்களின் மறைவு சந்தர்ப்பத்தில் தாம் எழுதிய அஞ்சலிக்  கட்டுரையில் இந்த சுயசரிதை குறித்து எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.   இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த முதன்மையான கன்னட எழுத்தாளர்களின் வாழ்வை ஏதோ ஒரு வகையில் பிளேக் நோய் பாதித்திருக்கிறது. யூ ஆர் அனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா நாவலில் பிளேக் பற்றிய மனம் நடுக்கும் காட்சிகள் உள்ளன.   ‌ பைரப்பாவின் வாழ்க்கையும் இதற்கு விதிவிலக்கல்ல.  மரணங்கள் ,மரணங்கள் , மரணங்கள் ஒரே நாளில் இரண்டு மணி நேரத்திற்குள் அண்ணன் அக்கா ஆகியோரின் மரணங்கள். பிறகு சுசிலா என்னும் ஒன்றரை வயது தங்கையின் மரணம். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத ஒரு நாளில் வந்து சேரும் அம்மாவின் மரணச் செய்தி. அம்மாவின் மரணத்திற்கும் ப்ளேக் தான் காரணம். ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் இடம்பெறும் நஞ்சம்மா யாரும் இல்லை என்னுடைய அம்மா கௌரிதான் என்று பைரப்பா வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். அம்மா இறந்து போன தருணத்தில் மனநிலைப் பிற...