நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்
இலக்கியம் என்னவெல்லாம் கொடுக்கும், ஓர் உடம்பில் இருந்து கொண்டு ஓர் ஆயிரம் வாழ்க்கையை வாழும் வாய்ப்பை! அப்புறம் சில இனிய நினைவுகளை எப்போதும் நிறைவளிக்கும் உறவுகளை இவ்வாறு இலக்கியம் கொடுப்பவை அநேகம். . நண்பர் சாகுல் ஹமீதிடம் அப்துல் வகாப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். பரமக்குடியில் மேலை முஸ்லிம் ஹைராப்த்துல் அலியா நடுநிலைப் பள்ளியில் 1988 89 ஆம் கல்வியாண்டில் வகாபும் நானும் ஆறாம் வகுப்பு படித்தோம். பார்வையற்ற மாணவன் என்பதால் என்னை வகுப்பில் முதல் வரிசையில் முதலில் உட்கார வைத்திருப்பார்கள். என்னுடன் வகாப் உட்கார்ந்திருப்பான். தாமஸ் யூரிக் காதரின் என்னும் மற்றொரு பையன் எங்களுடன் இருப்பான். முகமது அபுபக்கர், காத்தய்யா. மும்தாஜ் டீச்சர் வீட்டிற்கு எங்கள் அட்டையில் ரேஷன் வாங்கிக் கொண்டு போவேன். பணத்தை எண்ணி எண்ணி என் சட்டையில் வைத்துவிட்டு அது எங்கும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு குண்டூசியையும் டீச்சர் குத்தி விடுவார். ரிக்க்ஷாகாரர் வராத நாட்களில் என்னை வீட்டிற்கு கொண்டு வந்து விடும் பொறுப்பை வகாப் ஏற்றுக் கொள்வான் இஸ்லாமியப் ப...