பெண்ணுண்டோ மனோண்மணியே
குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல்களைப் படித்திருக்கிறேன், பாடம் நடத்தியிருக்கிறேன். அண்மையில் வாசித்தத் தமிழ் விக்கி பதிவு ஒன்றில் என்னை விட்டால் உனக்கு எத்தனையோ பேர் மாப்பிள்ளைமார், உன்னை விட்டால் எனக்கு பெண் உண்டோ மனோன்மணியே! என்று எழுதியிருப்பதாக நினைவு. அந்த நிமிடத்தில் இவரை பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. குணங்குடியார் சென்னையில் தான்அதிக காலம் வாழ்ந்திருக்கிறார். சென்னையில் 14 ஆண்டுகள் அவர் தியானத்தில் இருந்தார் என்பது ஐதீகம் தொண்டியிலிருந்து வந்து தங்கிய இடம் தொண்டியார் பேட்டை என்று தொடக்கத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் அது தண்டயார் பேட்டை என்று மாற்றமடைந்ததாக அறிகிறேன். அப்படி என்றால் குணங்குடியாரின் தர்கா தண்டையார்பேட்டையில் தான் இருக்க வேண்டும் என்று நினைத்துத் தேடியபோது அது பழைய வண்ணாரப்பேட்டையில் இருப்பதாக கூகுள் வரைபடம் காட்டியது. நேற்று ஜனவரி 13 திங்கட்கிழமை மாலையில் புறப்பட்டோம். அம்பத்தூரிலிருந்து வழக்கமான பாதையில் செல்ல முடியவில்லை. காரணம் மெட்ரோ பணி. அம்பத்தூரில் இருந்து மது...