ஓர் சுந்தர உரை
சுந்தர காண்டம் குறித்த நண்பர் ஜா ராஜகோபாலன் அவர்களின் உரை இப்போதே நிறைவு பெற்றது. விரிவான தத்துவப் பின் புலனிலிருந்து சுந்தர காண்டத்தை அணுகிய உரை. தொடர்ந்து யோசிக்க திறப்புகள் பல உரையில் வந்து கொண்டே இருந்தன. அனுமனைத் தடுக்கும், மைநாகம், சுரசை, அங்காரதாரை ஆகியோரை ஆணவம், கன்மம் மற்றும் மாயையின் இயல்புகளுடன் பொருத்திக் காட்டிய இடம் பிரமாதம்! ஓர் வில்லியின் தூதன் என்று அனுமன் கூறுவதில் உள்ள நுட்பம் என் வாசிப்பில் அகப்படாத ஒன்று. இன்று திரு. ஜா. ஜா அவர்களால் அகழ்ந்து முன் வைக்கப்பட்டுள்ளது நிகழ்வை சாத்தியமாக்கிய இம்பர்வாரி நண்பர்களுக்கு எப்போதும் என் அன்பு! . இதோ புதிய ஆண்டு பிறந்திருக்கிறது, இந்த ஆண்டு சுந்தர காண்டம் குறித்த இனிய நினைவுகளுடன் தொடங்கி இருக்கிறது. இன்னும் இன்னும் நிறைய பரிசுகளை இது கொண்டு வரவிருக்கிறது என்பதற்கு இந்த நிமித்தமே சான்று. நள்ளிரவு சுமார் 12 மணி 15 நிமிடங்களில் இந்தப் பதிவை எழுதுகிறேன். இன்னும் பிறவாத தலைமுறை நானும் வாழ்ந்திருந்தேன் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, ஐயமும் மனச்சோர்வும் ...