இப்படி செய்திருக்க வேண்டாமே சமஸ்
அருஞ்சொல் இதழ் இனிமேல் வெளிவராது என்று அதன் நிறுவனர் சமஸ் கூறிவிட்டார். ஒவ்வொரு நாளும் ஒரு கட்டுரை என்று அருஞ்சொல் வெளியிட்டுக் கொண்டிருந்தபோது நான் பெரும்பாலும் அந்த கட்டுரையை கவனிப்பதுண்டு. பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதும் பொருளியல் சார்ந்த கட்டுரைகள், யோகேந்திர யாதவ், ராமச்சந்திர குகா ஆகியோரின் அரசியல் கட்டுரைகள் இவற்றை தவறவிடுவதில்லை. அருஞ்சொல்லுக்கு தெளிவான ஒரு அரசியல் இருந்தது. அது வலதுசாரிஅ ரசியலுக்கு எதிரான ஒன்று என்பதாக வகுத்துக் கொள்கிறேன். மோதி தலைமையிலான அரசு 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று எல்லா கருத்துக்கணிப்புகளும் சொன்னபோது அடித்துச் சொல்கிறேன், பா. ஜ. க 300 இடங்கள் ஜெயிக்காது என்று சமஸ் எழுதினார். அவரின் சொற்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அது ஒரு ஆறுதலாக இருந்தது. அதற்காக காங்கிரஸ் மீது அருஞ்சொல். விமர்சனங்களை வைக்காமலும் இல்லை. அண்மையில் நடந்த ஹரியானா தேர்தலை காங்கிரஸ் சரியாக கையாளவில்லை என்ற கட்டுரையை சான்றாக சொல்லலாம். மூன்று மாதங்களுக்கு முன்பு புதிய தலைமுறை நிறுவனத்தில் தாம் ஏற்றுக் கொண்ட பொறுப்பு காரணமாக அருஞ்சொல் ஆசிரியப் பொறுப்பில் இருந்த