மண் மடிப்புகளுக்கு இடையே
பென்யமின் மலையாளத்தில் எழுதிய ஆடு ஜீவிதம் என்ற நாவல் தமிழில் எஸ். ராமன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு உயிர்மை பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது. ஆடு ஜீவிதம் நாம் கற்பனையும் செய்திருக்காத பாலைவன வாழ்க்கையை விவரிக்கும் நாவல். ஒரு தமிழ் மாணவனாக நான் அறிந்ததெல்லாம் பாலை நிலம் மட்டும்தான். நமக்கு பாலை என்பது வறண்ட மலையும் காடும் தான். உண்மையில் பாலைவனம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே பெரும்பாலும் இல்லை , எனலாம். பாலை குறித்த விரிவான பதிவுகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. சிலப்பதிகாரம் வேட்டுவவரி என்ற பெயரில் பாலை நில வாழ்க்கையை முன் வைக்கிறது. வெண்முரசில் பாலை குறித்து விரிவாக வாசித்ததுண்டு. எழுத்தாளர் செல்வேந்திரன் பாலை நிலப் பயணம் என்று ஒரு பயண நூல் எழுதி இருக்கிறார். பாலை நிலம்/வனம் குறித்த என் வாசிப்பு இவ்வளவு தான் இந்த வரிசையில் ஆடு ஜீவிதம் குறித்த மதிப்பீடு இது. பாலைவனம் குறித்த மிக விரிவான சித்திரத்தை வழங்கும் நாவல் ஆடு ஜீவிதம் அரேபியாவில் ஒரு கட்டட நிறுவனத்தில் வேலை என்று சொல்லி நசீபு அழைத்துச் செல்லப்படுகிறான். தான் துபாய...