பண்ணைக்கு ஒருவன்
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது இந்த ஆண்டு கவிஞர் விஜயகுமாருக்கு வழங்கப்பட்டது. ஜூன் 8 அன்று கவிக்கோ மன்றத்தில் விருது விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கன்னட எழுத்தாளர் வசுதேந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் நடத்தும் சந்தா புஸ்த்தகா என்ற பதிப்பகத்தின் சார்பில் ஆசிரியர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலின் கன்னட மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. கன்னட எழுத்தாளர் சாந்தி கே அப்பண்ணா நாவலை தலாதளா என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். ஏழாம் உலகம் நாவலை இரண்டு முறை படித்திருக்கிறேன். இப்போது கன்னடத்தில் படிக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நாவலின் ஒவ்வொரு பகுதி புதிய திறப்பை முன் வைக்கிறது. எருக்குவிற்கும் சீண்டன் நாயருக்கும் இருக்கும் பந்தம் இந்த முறை! ஒரு துளி அன்பே அன்றி நமக்கு வேண்டியது வேறு என்ன! நாவலை வெளியிடும் பேறு எனக்கு அமைந்தது! அது ஆசிரியரின் கனிவும் நண்பர்களின் அன்பும் அன்றி வேறென்ன! இந்தத் தருணத்தில் ஒன்று சொல்லிக் கொள்வேன் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்! நான் தகுதிப் படுத்திக் கொள்கிறேன்! கடல் கடந்து வந்த...