தனக்கென்று தனிப் பொய்கை!
இந்த தகிக்கும் கோடையில் சாரு மட்டும் ஒரு தனிப் பொய்கையில் நீந்திக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து காதல் கவிதைகளாக எழுதிக் கொண்டிருக்கிறார். கவிதை என்றால் அபூர்வமான படிமங்களையும் திகைப்பூட்டும் சொல்லாட்சிகளையும் கொண்டிருக்க வேண்டும் என்ற புரிதலை மறுபடியும் பொய்யாக்குபவை இந்தக் கவிதைகள். காத்திருத்தல், ஏக்கம், தவிப்பு உள்ளிட்ட நமக்கு அறிமுகமான அம்சங்களில் எளிய சொற்களில் வந்து விழும் கவிதைகள் இவை. சாலையில் உக்கிர வெயிலில் நடந்து செல்கையில் எங்கிருந்தோ வந்து என் முகத்தைத் தீண்டும் பனித்துளிகள் இந்தக் கவிதைகள். நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.