Posts

Showing posts from March, 2026

சந்தத்தின் சிறு நடனம்

கவிஞர் வி. சங்கர் அவர்களின் சூது பவளம் கண்டேன் அல்லேன் என்ற கவிதை தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன். ஒரே ஒரு முறை மட்டும் தான் ஒவ்வொரு கவிதையையும் படித்திருக்கிறேன். அர்த்தம் பற்றி எல்லாம் அப்புறம் பேசலாம். சந்த அனுபவத்திற்காகவே ஒருமுறை படித்துப் பார்க்கலாம். நவீன கவிதைகளில் காணப்படும் ஓசை வறட்சியை இந்தத் தொகுப்பு போக்கிவிட்டது என்று கவிஞர் லட்சுமி மணிவண்ணன் அவர்கள் முன்னுரையில் கூறியிருக்கிறார். நண்பர்களுக்குப்  பரிந்துரைக்கிறேன் . 

குருஜியிடமிருந்து பெற்றுக் கொண்டது

யோகம் என்பது ஓர் எட்டு வழிச்சாலை. இயமம்  நியமம்  ஆகியவை இந்த சாலையின் முதல் இரு வழித்தடங்கள்.   தூய்மை, மகிழ்ச்சி, தவம், ஒவ்வொரு நாளும் தன்னை அறிதல், இறையாற்றலுக்குஅற்பித்தல் ஆகியவையே ஐந்து நியமங்கள் . ஒவ்வொரு நாளும் யோகமாணவன் தன்னை தன்னுள் நிகழும் மாற்றத்தை அறிந்து கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அவன் தன்னை தொகுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நனவு நிலை அனுபவங்களுடன் கனவு முதலியவற்றின் அவதானிப்புகளும் அவசியம். நாம் உண்ணும் உணவும் நம்முடைய அன்றாட அனுபவங்களும் கனவுகள் தோன்ற காரணமாகின்றன என்பது குருஜி சௌந்தர் அவர்களின் கருத்து.  உணவு எவ்வாறு கனவுகள் உருவாக பங்களிக்கின்றன என்பது குறித்து இன்னும் எனக்குச் சரியாகப் புரியவில்லை. எனவே இது தொடர்பாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னிடம் எதுவும் இல்லை. ஆனால் அன்றாட அனுபவங்களுக்கும் கனவுகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி பகிர்ந்து கொள்ள என்னிடம் சில கருத்துக்கள் உள்ளன.  ஏழு மார்ச் 2026 சனிக்கிழமை இரவு எனக்கு ஒரு கனவு வந்தது. எங்கள் அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் ராமசாமித் தெரு வீடு அது. நான் ஒரு பள்ளி மாணவன். எங்கள் வ...

ஒரு காட்டுக் குரங்கை தோட்டக் குரங்காக மாற்றும் வித்தை

ஸ்ரீ சத்யானந்த யோக மரபில் யோகநித்ரா என்ற ஒரு பயிற்சி இருக்கிறது. யோகத்தின் எட்டு வழிப் பாதையில் ப்ரத்யாகாரம் என்னும் பிரிவை சார்ந்த ஒரு பயிற்சி இது. குரு சத்யானந்தர் அவர்களால் இந்த பயிற்சி நன்கு வடிவமைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி தொடர்பான தொடக்கநிலை புரிதலுக்கு எவ்வாறு வந்தார் என குரு சத்யானந்தர் அவர்களே கூறியிருக்கிறார்கள். பாரிஸ் நகரில் முனைவர் டோமர் என்பவரின் இல்லத்தில் ஆற்றிய உரையில் யோகநித்ரா பயிற்சிக்குரிய அடிப்படைக் கருதுகோள் எவ்வாறு வந்தது என்று குரு விளக்கியுள்ளார்கள்.. தம்முடைய ஆசிரியர் சிவானந்தர் அவர்களுடன் தாம் தங்கியிருந்த காலகட்டத்தில் வேதக் கல்வி நிகழும் ஆசிரமம் ஒன்றை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு குரு சத்யானந்தர் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இரவுப் பொழுதில் ஆசிரமத்தை கண்காணிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. காலை நான்கு மணி அளவில் இவர் உறங்கச் செல்வதுண்டு.  ‌ சிறிது காலம் கழித்து இவருக்கு வேறு பணிகள் வழங்கப்பட்டன. இவர்களின் மூல ஆசிரமத்தில் ஒரு விழா. அந்த விழாவில் வேத பாராயணம் செய்ய இவர் முன்பு பணியாற்றிய ரிஷிகேஷ் நகர ஆசிரமத்த...

சங்கல்பம் என்னும் தெய்வம்

குருஜி சௌந்தர் அவர்கள் தம்முடைய ஙப்போல்  வளை நூலில் சங்கல்பம் என்பதன் மகத்துவம் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள். அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இணையத்திலேயே வேறு சில கட்டுரைகளும் கிடைக்கின்றன. உதாரணமாக குரு சத்யானந்த சரஸ்வதி அவர்கள் பிரான்ஸ் தேசத்தில் ஆற்றிய உரை கட்டுரை வடிவில் yoga journal என்ற  இணையதளத்தில் இருக்கிறது. இந்த சங்கல்பம் என்பதை வாழ்வில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஒரு பயிற்சியை யோக மரபு வடிவமைத்துள்ளது. பத்து நிமிடம் மட்டுமே நீளக்குடிய இந்த பயிற்சிக்கு சங்கல்ப யோகநித்ரா என்று பெயர். இணையத்தில் உடனே தேடி ஏதோ ஒரு வீடியோவை கண்டுபிடித்து எடுத்து கவனித்து பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டாம். குருஜி சௌந்தர் போன்ற நல்லாசிரியர்களின் திருவடிகளை வணங்கி முறைப்படி கற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சியில் நான் இருக்கிறேன். என் அளவில் எனக்கு சில அனுபவங்கள் கிடைத்துள்ளன. என் மீது நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் இனிவரும் பகுதிகளை படித்தால் போதும்.   நேற்று ஓர் உரையை சிறப்பாக வழங்க வேண்டும் என்று சங்கல்பம் செய்திருந்தேன். நேற்று நாள் முழுக்க பெரும் கொந்தளிப...